அமெரிக்காவில் ஓட்டுநர் உரிமம் வழங்க புதிய முறை இரண்டு லட்சம் இந்தியர்களின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைத்த டிரம்ப்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாசிங்டன், மார்ச் 22- இனிமேல் வெளி நாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது மற்றும் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தால் புதுப்பிக்கமுடியாது என்ற புதிய சட்டமான டெலிலாவிற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித் துள்ளார்  இதன் மூலம் அமெரிக்காவில் வணிக ரீதியிலான டிரக் ஓட்டும் இந்தியர்கள் இனி உரிமத் தைப் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ முடியாது.

சிறுமி டெலிலாவும் கடும் பாதிப்பு

இந்த விதிமுறை யால் சுமார் 2 லட் சம் ஓட்டுநர்கள் பாதிக்கப் படுவார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக பஞ்சாப், அரியானா ராஜஸ் தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி டிரக் ஓட்டுநர் ஒருவரால் ஏற்பட்ட விபத்தில் ‘டெலிலா’ என்ற சிறுமி கடுமையாகப் பாதிக் கப்பட்டார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

இதன் மூலம் இந்தியர்கள் தற்போதுள்ள உரிமம் காலாவதியாகும் போது, அதை மீண்டும் புதுப்பிக்க முடியாது. புதிய கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்க முடியாது

இதனால் பல ஆயிரக் கணக்கான இந்திய இளைஞர்கள் தங்கள் வாழ் வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு

இந்திய ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவது குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு நாட் டின் உள்நாட்டுச் சட்ட திட்டங்களில் (குறிப்பாக ஓட்டுநர் உரிமம் போன்ற விவகாரங்களில்) தலையிடுவது ராஜதந்திர ரீதியாகச் சவாலானது.

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் டிரக் ஓட்டி வரும் இந்தியக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து மீண்டும் இந்தியா வரும் சூழல் உருவாகி விட்டது

டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியர்களுக்கு எதிரான மிகவும் மோச மான முடிவுகளை எடுத்து வருகிறார்.

தனது நண்பர் டிரம்ப் என்று மேடை தோறும்பேசும் மோடி அங்கு வாழும் இந்தியர் களைப் பாதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கூறாமல் இந்தியர்களுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கையை கள்ள மவுனத்தோடு வேடிக்கை பார்க்கிறார் என்று வாழ்வாதரம் இழக்கப் போகும் குடும்பங்கள் பெரிதும் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *