பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) இலவச செயற்கைக் கால், செயற்கைக் கை, மூன்று சக்கர நாற்காலி மற்றும் உதவி உபகரணங்கள் பொருத்தும் முகாம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சாவூர், மார்ச் 22– பெரியார் மணியம்மை அறிவியல மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் இலவச செயற்கை கால், செயற்கை கை, மூன்று சக்கர நாற்காலி மற்றும் அவைய உபகரணங்கள் வழங்கி பொருத்தும் மாபெரும் நிகழ்வு தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் வெகு சிறப்பாக 19.03.2026 அன்று முதல் நாள் நிகழ்வாக பெரியார் புரா மேம்பாட்டு மய்யம் சிறீபகவான் மகாவீர் விக்லங் சஹாயதா சமதி  ஜெப்பூர் நிறுவனங்கள் ஒருங்கி ணைத்து நடத்திய இந்நிகழ்விற்கு பல் கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

அவர் தமது உரையில் பொருளா தாரத்தில் பின்தங்கியுள்ளவர்களை இனம் கண்டு 700 பேர் பயனாளிகள் பதிவு செய்துள்ளார்கள். இதில் முதல் நாளான 19.3.2026 அன்று 300 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளார்கள். இதில் செயற்கை கை, செயற்கைகால்களை, பயனாளிகளின் கால் கை அளவை எடுத்து அதற்கு தகுந்தாற்போல் வடிவமைத்து இரண்டு மணி நேரத்தில் பயனாளிக்கு செயற்கைகால், செயற்கை கை பொருத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று சைக்கிள் தேவைபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

பெரியார் கல்வி நிறுவனங்கள்

பெரியார் கல்வி நிறுவனங்கள்

பெரியார் புரா மேம்பாட்டு மய்யம்

இதர உடல் அவையங்கள் தேவைக் கேற்ப கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது. பெரியார் புரா மேம்பாட்டு மய்யம் தன்னார்வ தொண்டுள்ளதோடு  சிறீபகவான் மகாவீர் விக்லங் சஹாயதா சமதி ஜெப்பூர் நிறுவனத்துடன் இணைந்து ஒரு சமுதாய நல்லிணக்கம் விழாவாக இதனை நடத்தியது. தொடர்ந்து பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இது போன்ற விழாக்களை நடத்திவருகின்றது. பயனாளிக்கு அளிக்கப்பட்ட செயற்கை அவையங்களின் மதிப்பு ரூபாய் அய்ம்பது இலட்சமாகும்.

பயனாளிகளுக்கு வழங்கல்

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மேஜர் பேராசிரியர் பொ.விஜயலெட்சுமி, சமூக நலத்துறை இயக்குநர் பேராசிரியர் ஆனந்த ஜொரார்டு செபாஸ்டின், இணை பேராசிரியர் கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் பா.இளங்கோவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் உபகரணங்களை பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மல்லிகா, பதிவாளர். பேராசிரியர் பி.கே.சிறீவித்யா ஆகியோர் பயனாளிகளுக்கு அளித்தனர். சறீபகுவான் மகாவீர் விக்லங்கு சமிட்டி ஜெய்ப்பூர் செயலாளர் மேலாண்மைக்குழு மற்றும் புதுடில்லி கட்டடக் எழிற்கலை பிரகரத்தி மேத்தா  அவர்களின் பங்களிப்புடன் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

  1. சக்கரநாற்காலி-75
  2. அக்குள் உன்றுகோல்கள்-20
  3. அச்சு ஊன்றுகோல்-20
  4. ஆர்தோடிக்காலிப்பர்ஸ்-75
  5. காதுகேட்கும் கருவி-120
  6. சக்கர நடை வண்டி-15
  7. சக்கர நாற்காலி-65
  8. செயற்கைக் கால்கள்-136
  9. செயற்கைக் கைகள்-35
  10. நான்குகால் நடைத்தடி-26
  11. பார்வையற்றோர்களுக்கான கைகுச்சி -20
  12. மாற்றியமைக்கப்பட்ட காலணிகள்- 20
  13. முழங்கை ஊன்றுகோல்-20
  14. மூன்று சக்கரவண்டி-50
  15. வாக்கர் மடிப்பு-14
  16. வாக்கிங் நடைக்குச்சி-11

மொத்தம்     707

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *