தேர்தல் ஆணையத்திற்கு ஒரு முக்கிய வேண்டுகோள்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 15.3.2026 அன்று மாலை
4 மணிக்கு அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் விதிமுறை நடைமுறையில் பின்பற்றப்பட வேண்டிய பல உடனடி நடவடிக்கைகள் செயலுக்கு வந்துவிட்டன.

அதில் குறிப்பாக, 50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.  திருமணங்கள் நடக்கும்போது நகை, துணி மணிகள் முதலியவற்றை வாங்கவும், விவசாயிகள் நெல், தானியம் விற்று வரும் வரவு, ஆடு, மாடு சந்தைகளில் விற்று வரவு வரும் பணத்தை எடுத்துச் செல்லுதல் போன்ற அன்றாட வாழ்வின் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் எளிய, நடுத்தரக் குடும்பத்தவர்கள், வங்கியில் போட, இத்தகைய வணிகம்மூலம் கிடைத்தத் தொகையை எடுத்துச் செல்லும் சிறு வியாபாரிகள், அப்பாவிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். திருமண நிகழ்வு நடவடிக்கைகளேகூட தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பு முடியும் ஒரு மாத காலத்திற்கு மிகவும் சிக்கலாகவும்,  தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி, மக்கள் விரோத நடவடிக்கையாகவும் கருதப்படுகின்றன!

வாக்களிப்போரின் கோபத்திற்கும், விரக்திக்கும், வேதனைக்கும்கூட வழி செய்கிறது. இதைத் தவிர்த்து, நடைமுறையில் மற்ற தவறான முறைகளை விழிப்போடு கண்காணிக்க வழிமுறையை ஆராய்ந்து செய்யுங்கள்!

‘அல்லல்பட்டு ஆற்றாது அழுத’ ஏழை விவசாயிகள், வியாபாரிகள் ஆகி யோரின் நிலை அறிந்து, தக்க மாற்றம் செய்யவேண்டியது அவசியம்,
அவசரம்!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை   

21.3.2026     

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *