சென்னை. மார்ச். 21- தந்தை பெரியாரின் மனிதநேயக் கருத்துகள் மக்களிடம் போய் சேர்ந்துவிடாமல் இருப்பதற்காகவே, அவரை கடவுள் மறுப்பாளர் என்ற வட்டத்துக்குள் சுருக்கிவிட்டனர் என்று பச்சையப் பன் கல்லூரி தமிழ்த்துறை மாண வர்களிடம் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
விரும்பு-கருத்திடு-பகிர்ந்திடு
சென்னை பச்சையப்பன் கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத் துறை சார்பில், ”எம்.டி.கோபால கிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு” மூன்றாம் ஆண்டாக 18.03.2026 அன்று, பச்சையப்பன் கல்லூரி நார்ட்டன் அரங்கில் காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வின் தலைப்பாக, சமூக ஊடகங்களில் அதிகம் பயணிக்கும் இன்றைய மாணவர்களின் கருத்தைக் கவரும் வண்ணம், ’விரும்பு – கருத்திடு – பகிர்ந்திடு’ (Like – Comment – Share) எனும் தலைப்பில், தந்தை பெரியார் குறித்த பேருரையை கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி உரையாற்றினார். நிகழ்வில், தமிழ்த்துறையின் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் ச.உமா அனைவரையும் வரவேற்றும், கல்லூரியின் முதல்வர் முனைவர் பேபி குல்நாஸ் தலைமை வகித்தும் உரை நிகழ்த்தினர். அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் கோ.ஒளிவண்ணன் நிகழ்வின் நோக்கம் பற்றி சுருக்கமாக உரையாற்றினார். நிகழ்ச்சி ஏற் பாட்டாளர் சார்பில் மேடையில் வீற்றிருந்த ஆளுமைகளுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்து, புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. நிறைவாக, துணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி உரையாற்றினார்.
பாலியல்
குற்றங்களுக்குத் தீர்வு
குற்றங்களுக்குத் தீர்வு
அவர் தமது உரையில், சமூக ஊடகங்களில் தாக்கம் (Influencer) செலுத்துகிறவர்கள் பற்றியும் அதைப் பின்பற்றுகிறவர்கள் பற்றியும் குறிப்பிடும் போது, இறந்தும் கடந்த 50 ஆண்டுகளாக, தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் தாக்கம் செலுத்துகின்ற பெரியாரைப் பற்றி குறிப்பிட்டார். அந்தத் தாக்கங்கள் தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட ஆக்கங்களை உண்டாக்கியிருக்கின்றன என்ப தையும் பட்டியலிட்டார். குறிப் பாக, தந்தை பெரியாரின் மனித நேயக் கருத்துகள் மக்களிடம் சேர்ந்துவிடக்கூடாது என்ற சூழ்ச்சியுடன், அவரை வெறும் கடவுள் மறுப்பாளர் என்று சுருக்க முனைந்ததையும், அதையும் தாண்டி பெரியாரின் கருத்துகள் பரவியதையும் காரண காரியத்துடன் விளக்கினார். மேலும் இன்றைய சமூகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு பெரியார் சொல்லிச் சென்ற தீர்வை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, ஆணாதிக்க சிந்தனையை தவிர்த்து, ஆண், பெண் இருவரும் ஒரு பண்பட்ட சமூகமாக; மானமும் – அறிவும் உள்ள சமூகமாக மாறுவதற்கான பெரியாருடைய கருத்துகள் குறித்து வகுப்பெடுத்தார். நிறைவாக, இப்படிப்பட்ட கருத்துகளை, ’விரும்புங்கள்; கருத் திடுங்கள்; பகிர்ந்திடுங்கள்’ என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக, தமிழ்த்துறையின் இணைப் பேராசிரியர் செ.விஜய லட்சுமி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தார். நார்ட்டன் அரங்கு நிறைய அமர்ந்திருந்த தமிழ்த்துறை மாணவர்கள், நிகழ்ச்சி முடியும் வரை இருந்து, கருத்துகளை உள்வாங்கியதுடன் ஆங்காங்கே கரவொலி எழுப்பி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். மாணவர்கள் இடையிடையே சிறப்புப் பேச்சாளர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச் சியில் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாண வர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை கண்டு களித்தனர்.
