சென்னை, மார்ச் 21- சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்புலன்ஸ் சேவை, அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்சாரம் உள்ளிட்ட 7 அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்குப் புதிதாக அஞ்சல் வாக்கு வசதி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம் பின்வருமாறு:
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைமுறை
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என வகைப்படுத்தப்பட்டவர்கள் அஞ்சல் வாக்கு மூலம் தங்கள் வாக்கைச் செலுத்தலாம்.இவர்கள் தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாள்களுக்குள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ‘12டி’ (12D) படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.வாக்குச் சேகரிக்கும் குழுவினர், இத்தகைய வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வாக்குகளைச் சேகரிப்பார்கள்.
7 அத்தியாவசியத் துறையினருக்குப்
புதிய வாய்ப்பு
புதிய வாய்ப்பு
தேர்தல் நாளில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், தங்கள் துறையின் சார்பில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மூலம் அஞ்சல் வாக்குக்கு விண்ணப்பிக்கலாம்.
புதிதாக இந்தப் பட்டியலில்
7 துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன:
7 துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன:
தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து (தனியார்)ஆம்புலன்ஸ் சேவை, விமானப் போக்குவரத்து, அரசு சாலைப் போக்குவரத்துக் கழகங்கள். இப்பணியாளர்கள் தங்களுக்குரிய அஞ்சல் வாக்கை பெற்று, அதனைப் பதிவு செய்து நிர்ணயிக் கப்பட்ட வசதி மய்யத்தில் (Facilitation Center) சமர்ப்பிக்க வேண்டும்.
ராணுவம் மற்றும் காவல் துறையினருக்கான மின்னணு முறை
ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட சேவைத் துறைகளில் இருக்கும் வாக்காளர்களுக்கு, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் மின்னணு முறையில் (ETPBS) அஞ்சல் வாக்குகள் அனுப்பப்படும். இதற்கான அஞ்சல் செலவை அவர்கள் ஏற்க வேண்டியதில்லை.
வாக்கு எண்ணும் நாள்
மற்றும் காலக்கெடு
மற்றும் காலக்கெடு
பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் அனைத்தும், வாக்கு எண்ணும் நாளான மே 4ஆம் தேதி காலை 8 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரைச் சென்றடைய வேண்டும். மேற்கண்ட விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
