சாதாரண கைப்பேசி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 21- சாதாரண கைப்பேசி வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை வழங்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை ஒன் செயலி

சென்னை மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக சென்னை ஒன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனா்.

இதுதவிர, நாள்தோறும் பயணிப்பவா்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்தச் செயலியில் டிஜிட்டல் மாதந்திர சலுகை பயண அட்டையும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, குளிா் சாதன வசதி கொண்ட பேருந்து தவிர, மற்ற அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் விருப்பம்போல் பயணிக்க மாதம் ரூ.1,000, குளிா்சாதன வசதி பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்க மாதம் ரூ.2,000 கட்டணமாக செலுத்தி டிஜிட்டல் அட்டையை பெற்றுக்கொள்ளும் வசதியும் இந்தச் செயலியில் உள்ளது.

இதன் மூலம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்து வருகிறாா்கள். இருப்பினும் ஸ்மாா்ட் கைப்பேசி வைத்திருக்கும் பலா் மாதாந்திர பயண அட்டை வழங்கும் மய்யங்களுக்குச் சென்று அட்டைகளைப் பெற்று பயன்படுத்தி வருகின்றனா். இதற்கு மாநகா் போக்குவரத்துக் கழகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

பணம் இல்லா பரிவர்த்தனை அதிகரிக்கும்!

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஸ்மாா்ட் கைப்பேசி வைத்திருக்கும் அனைவரும் சென்னை ஒன் செயலி வாயிலாக மாதாந்திர பயண அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இருப்பினும் பலா் வழக்கம் போல பணிமனைக்கு வந்து அட்டையைப் பெற்று பயணிக்கின்றனா். இதனால், ஸ்மாா்ட் கைப்பேசி வைத்திருக்கும் பயணிகளைத் தவிர சாதாரண கைப்பேசி வைத்திருப்பவா்கள், ஸ்மாா்ட் கைப்பேசியை முறையாக உபயோகிக்க தெரியாத முதியவா்கள் ஆகியோருக்கு மட்டுமே மய்யங்கள் மூலம் இனி பயண அட்டை வழங்க மாநகா் போக்குவரத்துக் கழகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பேருந்துகளிலும் வயதான மற்றும் ஸ்மாா்ட் கைப்பேசியை முறையாகப் பயன்படுத்த தெரியாதவா்களுக்கு மட்டுமே பணம் பெற்று பயணச்சீட்டு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பணமில்லா பரிவா்த்தனை அதிகரிக்கும் என்று அவா் தெரிவித்தாா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *