ஆசிரியர் விடையளிக்கிறார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கேள்வி 1: “நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன்” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியதாக ‘தினமலர்’ செய்தி வெளியிட்டுள்ளதே?

– வ..அன்புக்கரசன், நெல்லை

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 1: நமக்கும் புரியவில்லை. உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்பவர்கள் கடமையாற்றுகையில் எதையும் objective ஆக – விருப்பு வெறுப்பு இன்றித் தம் பணியைப் புரிய வேண்டியதே நீதிமன்ற நீதி ஆளுமையின் தத்துவம்!

தனிப்பட்ட முறையில் “நான், எனது” என்ற சிந்தனையே நீதி பரிபாலனத் தத்துவத்திற்கே எதிரிடையான மனப்பாங்கு – எடுத்த உறுதிமொழி, ‘விருப்பு, வெறுப்புக்கு ஆளாகாமல்’ என்பதற்கும் நேர் முரண் என்பது ஏனோ அவருக்குப் புரியவில்லைபோலும்!

  • • •

கேள்வி 2: அகண்ட பாரதம் போல் அகண்ட இஸ்ரேல் திட்டம் அவர்களிடம் உள்ளதாக ஆங்கில ஏடு கட்டுரை எழுதியுள்ளதே, யாரிடமிருந்து இந்த அய்டியாவைப் பெற்றிருப்பார்கள்?

– வெ.தமிழ்மாறன், புதுவை

பதில் 2: ‘அகண்ட’ நீளுவது ஏகாதிபத்திய எஜமான மனப்போக்கே தவிர, ஜனநாயகத் தத்துவத்திற்கு உகந்தது அல்ல. இஸ்லாமிய நாடுகளை மனதிற்கொண்டு கூறுகிறாரோ என்னவோ, அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

  • • •

கேள்வி 3: மனித நாகரிகத்தின் துவக்கத்தில் இருந்து இருக்கும் ஒரு நாட்டை 40 ஆண்டுகள் கூட ஆகாத ஒரு நாடு அடிபணியவைக்க முயல்வது எதைக்குறிக்கிறது?

– ம.முகுந்தன், தாம்பரம்

பதில் 3: இனவெறி, அதிகார வெறியின் திமிரைக் காட்டுகிறது!

  • • •

கேள்வி 4: பெண்கள் குறித்த அநாகரிகப் பேச்சு குறித்து குறைந்தபட்ச வருத்தம் கூட அக்கட்சித் தலைவரிடமிருந்து வரவில்லையே?

– தா.சத்தியசீலன், திருத்தணி

பதில் 4: அரசியல் கட்சித் தலைவர்கள், இந்த அரசியல் அருவருக்கக் கூடிய ஆபாச பேச்சுகளைப் பேசுபவர்களை அக்கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தால்தான் அவர்களுக்கும், சமூகத்திற்கும் நல்லது!

  • • •

கேள்வி 5: வாரணாசியில் கங்கையில் நோன்பு திறந்ததற்காக கங்கையைத் தீட்டாக்கிவிட்டார்கள் என்று 11 இஸ்லாமியர்களை கைது செய்து சிறையில் தள்ளியதை காவல்துறையினரே நியாயப்படுத்தி உள்ளார்களே?

– ரா.கன்னியப்பன், காஞ்சிபுரம்

பதில் 5: மோடி ஆட்சியும், மோடி தொகுதியும் எப்படிப்பட்ட ஆளுமையின் கீழ் நடைபோடுகின்றன என்பதற்கு நல்ல சாட்சிகளாகும்!

  • • •

கேள்வி 6: நிதிஷ்குமார் மாநிலங்களவைக்குச் செல்வதால் மாநிலத்தில் அவரின் கட்சியின் கதி என்ன? இது அக்கட்சிக்குத் தற்கொலை முயற்சியா? வளர்ச்சியா?

– அ.கார்மேகன், திருவள்ளூர்

பதில் 6: அதோ கதி. ஏற்கெனவே அவருடன் பல ஆண்டுகள் பயணித்தவர்கள் எல்லாம் வெறுத்து வெளியேறி விட்டார்களே!

  • • •

கேள்வி 7: புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பமாமே? மோடி வித்தை அங்கு எடுபடவில்லையா?

– ம.சந்திரன், திண்டிவனம்

பதில் 7: புதுச்சேரி அரசியலில் அப்பா அழுக்குசாமியின் சக்தியை அந்த மாநில (பொல்திக்) politic – இனி காணத்தான் போகிறது!

  • • •

கேள்வி 8: கடவுள் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி என கொண்டாடுபவர்கள் இறந்த நாளை ஏன் வருத்தமான நாளாக – கெட்ட நாளாகக் கடைப்பிடிப்பதில்லை?

– அ.வேலன், கரூர்

பதில் 8: பக்தகோடிகள்தான் யோசிக்க வேண்டும்.

  • • •

கேள்வி 9: எரிவாயு தட்டுப்பாட்டால் மீண்டும் ‘விறகு அடுப்பு’க்கு மக்கள் மாற வேண்டியதுதானா?

– ம.காந்திமதி, மதுரை

பதில் 9: ‘விஸ்வகுரு’வாக இந்தியா மாறி வருகிறது என்கிறார் பிரதமர் மோடி. அவர்தான் இதற்குப் பதில் கூற முழுத் தகுதி படைத்தவர்.

  • • •

கேள்வி 10: 16 வயதுக்கு உள்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை அறிவித்தது நவீன உலகில் சரியானதுதானா?

– ப.குணசேகரன், வேளச்சேரி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 10: நன்மையும், தீமையும் கலந்துள்ள முடிவு – கண்காணிப்பது எளிதல்ல. சட்டத்தை அமல்படுத்துதலும் அவ்வளவு எளிதல்ல.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *