‘‘திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்!
கொள்கை ரீதியாக நாங்கள் இணைந்திருக்கின்றோம், எங்களைப் பிரிக்க முடியாது!
எங்கள் தோழர்கள் சிறைச்சாலையில் இருக்கட்டும்;
அவர்களை நீங்கள் விடுதலை செய்யவேண்டாம்- சிறைச்சாலையிலேயே அவர்கள் செத்தாலும் பரவாயில்லை!’’
கொள்கை ரீதியாக நாங்கள் இணைந்திருக்கின்றோம், எங்களைப் பிரிக்க முடியாது!
எங்கள் தோழர்கள் சிறைச்சாலையில் இருக்கட்டும்;
அவர்களை நீங்கள் விடுதலை செய்யவேண்டாம்- சிறைச்சாலையிலேயே அவர்கள் செத்தாலும் பரவாயில்லை!’’
சென்னை, மார்ச் 20 ‘‘திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள். அதைவிட முக்கியம், தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக ஆட்சியைக் கொடுத்தார்கள். அந்த ஆட்சியோடு நாங்கள் கொள்கை ரீதியாக இணைந்திருக்கின்றோம். பெரியார் காலத்திலிருந்து நாங்கள் எந்த விளைவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் இணைந்திருக்கின்றோம். எங்களைப் பிரிக்க முடியாது. எனவே, எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் எங்கள் தோழர்கள் சிறைச்சாலையில் இருக்கட்டும்; அவர்களை நீங்கள் விடுதலை செய்யவேண்டாம். சிறைச்சாலையிலேயே அவர்கள் செத்தாலும் பரவாயில்லை, நான் வருகிறேன்’’ என்று அன்னை மணியம்மையார் அவர்கள், உள்துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டியிடம் கூறியதை எடுத்துக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- ‘‘திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்! கொள்கை ரீதியாக நாங்கள் இணைந்திருக்கின்றோம், எங்களைப் பிரிக்க முடியாது! எங்கள் தோழர்கள் சிறைச்சாலையில் இருக்கட்டும்; அவர்களை நீங்கள் விடுதலை செய்யவேண்டாம்- சிறைச்சாலையிலேயே அவர்கள் செத்தாலும் பரவாயில்லை!’’
- ‘‘சட்டப்பேரவை தேர்தலும் – வாக்காளர் கடமையும்!’’
- தந்தை பெரியார் இருந்திருந்தால், எப்படிச் சொல்வாரோ, அதேபோன்று, ஓர் அறிவுரை!
- அவதூறுகளைப்பற்றி கவலைப்படாதீர்கள், ஈரோட்டுப் பள்ளியில் பயின்றவர் நீங்கள்!
- இந்தியாவையே உலுக்கிய இராவண லீலா!
- 40 ஆண்டுகளுக்கு மேலானாலும், அதனுடைய தாக்கம் இன்னமும் இருக்கிறது எனக்கு!
- அன்றைய உள்துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டி!
- ‘‘தி.மு.க.வுக்கும் – எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லுங்கள்’’ என்றார்!
- திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்!
- வடக்கே நடக்கலாம்; இங்கே அவர்களுடைய பாச்சா பலிக்காது!
- இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
- ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!’
‘‘சட்டப்பேரவை தேர்தலும் –
வாக்காளர் கடமையும்!’’
வாக்காளர் கடமையும்!’’
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், ‘‘அன்னை மணியம்மையார் நினைவு நாள் – 2026 சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்’’ எனும் தலைப்பில், கடந்த 16.03.2026 அன்று மாலை 6 மணிக்கு, மேற்கு தாம்பரத்தில் உள்ள பெரியார் நகர் – பாரதி திடல் சண்முகம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
தந்தை பெரியார் இருந்திருந்தால், எப்படிச் சொல்வாரோ,
அதேபோன்று, ஓர் அறிவுரை!
அதேபோன்று, ஓர் அறிவுரை!
ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்னை மணியம்மையார் அவர்களும், நானும் கலந்து கொண்டோம். இலட்சக்கணக்கான மக்கள் திரண்டி ருந்தனர். அக்கூட்டத்தில் உரையாற்றிய அன்னை மணியம்மையார் அவர்கள் ஓர் அறிவுரை சொன்னார், கலைஞருக்கு. தந்தை பெரியார் இருந்திருந்தால், எப்படிச் சொல்வாரோ, அதேபோன்று, ஓர் அறிவுரை சொன்னார்.
அவதூறுகளைப்பற்றி கவலைப்படாதீர்கள், ஈரோட்டுப் பள்ளியில் பயின்றவர் நீங்கள்!
‘‘நீங்கள், இந்த அவதூறுகளைப்பற்றி கவலைப்படாதீர்கள். ஏனென்றால், ஈரோட்டுப் பள்ளியில் பயின்றவர். அவதூறுகளையெல்லாம் தூக்கி எறியுங்கள். ஆட்சி என்ற பொறுப்பு உங்கள் தலைமீது இருக்கிறது. அண்ணாவிற்குப் பிறகு, வழிநடத்தவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உங்கள் தலைமீது இருக்கிறது. தலையின்மீது உள்ள பாத்திரத்திற்குள் மக்களுக்குப் பரிமாற வேண்டிய மிக முக்கியமான உணவுகள் எல்லாம் இருக்கிறது. பசியைத் தீர்க்க கூடியவராக இருக்கிறீர்கள். மற்றவர்கள் எல்லாம் காலிப் பானையோடு உங்களை எதிர்க்க வருகிறார்கள். காலிப்பானையை தலையில் வைத்திருக்கிறவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடலாம்; அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்கள் தலையில் இருப்பது காலிப்பானை இல்லை. ஆட்சி என்ற மிக முக்கியமான அதுவும் ‘திராவிட ஆட்சி’ என்று சொல்லக்கூடிய மிக முக்கியமான ஒன்று இருக்கிறது. எனவே, நீங்கள் எதையும் நிதானமாக செய்ய வேண்டும். கரண்டியை எடுக்கும்போதுகூட நன்றாகத் துழாவிப் பார்த்து எடுத்துப் போட வேண்டும்; பெண்களுக்குப் புரிகின்ற உதாரணத்தைச் சொல்கிறேன்’’ என்று அன்னை மணியம்மையார் அவர்கள் சொன்னார்.
மணியம்மையார் அவர்கள் சொன்னதை வெகுவாக ரசித்தார் கலைஞர். ‘‘அன்னை மணியம்மையார் அவர்கள், தந்தை பெரியார் இருந்து வழிநடத்தினால் எப்படி வழிநடத்துவார்களோ, அதுபோல எனக்கு அறிவுரை சொல்லி, இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கருத்தைச் சொன்னார்’’ என்று கலைஞர் குறிப்பிட்டார்.
இந்தியாவையே
உலுக்கிய
இராவண லீலா!
உலுக்கிய
இராவண லீலா!
அப்படிப்பட்ட ஓர் உணர்வாளர் அன்னை மணியம்மையார் அவர்கள். இராவண லீலாவை இந்தியாவையே உலுக்கக்கூடிய அளவிற்குச் செய்தார்கள். இந்தியாவே திரும்பிப் பார்த்தது.
பிரதமர் இந்திரா இந்திரா காந்தி அவர்கள், அன்னை மணியம்மையார் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார், இராவண லீலாவை நிறுத்தச் சொல்லி. பொதுச்செயலாளர் என்ற முறையிலே எனக்கும் ஒரு கடிதத்தை, பிரதமர் அவர்கள் அனுப்பினார். முதலமைச்சராக கலைஞர் இருந்தார். அப்பொழுது அன்னை மணியம்மையார் அவர்கள், ‘‘அவருடைய கடமையை, அவர் செய்யட்டும்; ஆட்சி செய்யட்டும். நம்முடைய கடமையை, நாம் செய்வோம்’’ என்று சொன்னார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அம்மாவும் கைது செய்யப்பட்டார்கள்; அதற்கு முதல் நாள் நாங்களும் கைது செய்யப்பட்டோம்.
‘‘எங்கள் பணியை நாங்கள் செய்கிறோம்; இந்தப் பணியை என்றைக்கும் நாங்கள் நிறுத்தமாட்டோம். ஏனென்றால் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதுதான் மிகப்பெரிய முதன்மையான பணி’’ என்று அம்மா சொன்னார்.
இப்படி எத்தனையோ செய்திகளைச் சொல்ல முடியும் தோழர்களே!
நாங்கள் எல்லாம் மிசாவில் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் இருந்தோம். மிசாவில் கைது செய்யும்பொழுது, எதற்காகக் கைது செய்கிறோம் என்று யாரும் காரணம் சொல்ல மாட்டார்கள். எப்பொழுது வெளியில் விடப் போகிறார்கள் என்றும் தெரியாது.
எங்களுடன் சிபிஎம் தோழர்கள் நிறைய பேர் சிறைச்சாலையில் இருந்தார்கள். அரிபட் என்ற ஒரு தோழர், தாம்பரத்தில் வழக்குரைஞர் சிவாஜி என்ப வரும் சிறைச்சாலையில் இருந்தனர். எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் அவர்.
40 ஆண்டுகளுக்கு மேலானாலும், அதனுடைய தாக்கம்
இன்னமும் இருக்கிறது எனக்கு!
இன்னமும் இருக்கிறது எனக்கு!
சிறைச்சாலையில் எங்களையெல்லாம் அடித்தார்கள். ஓர் அரை நூற்றாண்டுக்குமேல் ஆகிவிட்டது. அதனுடைய தாக்கம் எனக்கு இன்னமும்
இருக்கிறது.
உள்துறை அமைச்சராக இருந்த பிரமானந்த ரெட்டி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார். அன்றைக்கு ஆளுநராக ராஜஸ்தானைச் சேர்ந்த மோகன் லால் சுகாடியா என்பவர் இருந்தார். ஆளுநர் மாளிகையில் இருந்த உள்துறை அமைச்சரை, இயக்கத்தின் தலைவர் என்ற முறையில், அன்னை மணியம்மையார் அவர்கள், உள்துறை அமைச்சரைச் சந்திப்பதற்கு அனுமதி பெற்றுச் சென்றார்.
அன்றைய உள்துறை அமைச்சர்
பிரமானந்த ரெட்டி!
பிரமானந்த ரெட்டி!
உள்துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டி ஆந்தி ராக்காரர். அவர் வழக்குரைஞர். அம்மா ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்கள், முதலில்.
‘‘அம்மா எனக்குத் தமிழ் நல்லா தெரியுமா! நீங்கள் தமிழில் கூட ஃப்ரீயா பேசலாம்; என்னிடம் இங்கிலீஷ்ல பேசணும் என்றுகூட அவசியம் இல்லை’’ என்றார் பிரமானந்த ரெட்டி.
‘‘இல்லை உங்களுக்குத் தமிழ் தெரியாது என்றுதான் நான், இங்கிலீஷ்ல பேச ஆரம்பித்தேன்’’ என்று அன்னை மணியம்மையார் சொன்னார்.
அவருக்குத் தமிழ் தெரியும் என்றவுடன், ‘‘சரி, எங்கள் திராவிடர் கழகத் தோழர்களை எதற்காக கைது செய்திருக்கிறீர்கள்? அரசியல் ரீதியாக அவர்கள் இல்லை. அப்படிப்பட்டவர்களை, எதற்காக காரணம் இல்லாமல், மிசா சட்டத்தில் கைது செய்து, சிறைச்சாலையில் வைத்திருக்கிறீர்கள்’’ என்று கேட்டார்.
அப்பொழுது ஆளுநர் மோகன் லால் சுகாடியாவும் பக்கத்தில் அமர்ந்திருந்தார்.
‘‘தி.மு.க.வுக்கும் – எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லுங்கள்’’ என்றார்!
உடனே, உள்துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டி அவர்கள், ‘‘அம்மா, நீங்கள் கேட்டது போன்று, உங்கள் திராவிடர் கழகத் தோழர்கள் எல்லோரையும் விடுதலை செய்யச் சொல்கிறேன். ஆனால், ஒரே ஒரு விஷயம், நீங்கள் ஒரு காரியத்தைச் செய்தால், நான் உடனே உங்கள் தோழர்களை விடுதலை செய்யச் சொல்லு கிறேன்’’ என்றார்.
‘‘என்னவென்று’’ அம்மா கேட்டார்கள்.
‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தோடு நீங்கள் ரொம்ப உறவோடு இருக்கிறீர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினர், உங்களைப் பார்த்து உற்சாகம் அடைந்து செயல்படுகிறார்கள். நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப இணைந்து இருக்கிறீர்கள். தி.மு.க.வுக்கும் – எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லுங்கள்; நான் எல்லோரையும் விட்டு விடச் சொல்கிறேன்’’ என்று சொன்னார் பிரம்மானந்த ரெட்டி.
திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்!
உடனே, சிங்கம் மாதிரி, புலி மாதிரி சீறி எழுந்தார் அன்னை மணியம்மையார் அவர்கள், இரண்டு கைக ளையும் மேலே தூக்கி, கும்பிட்டுவிட்டு, ‘‘அய்யா உள்துறை அமைச்சர் அவர்களே, (ஆங்கிலத்திேலயும் சொன்னாங்க) உங்களை சந்தித்து, எங்களுடைய கோரிக்கையை நாங்கள் சொல்லிவிட்டோம். திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று ஏற்கெனவே தெரியும். அதைவிட முக்கியம், தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக ஆட்சியைக் கொடுத்தார்கள். எனவே, அந்த ஆட்சியோடு நாங்கள் கொள்கை ரீதியாக இணைந்திருக்கின்றோம். பெரியார் காலத்திலிருந்து நாங்கள் எந்த விளைவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் இணைந்திருக்கின்றோம். எங்களைப் பிரிக்க முடியாது. எனவே, எத்தனை வருஷம் வேண்டுமானாலும் எங்கள் தோழர்கள் சிறைச்சாலை யில் இருக்கட்டும்; அவர்களை நீங்கள் விடுதலை செய்யவேண்டாம். சிறைச்சாலையிலேயே அவர்கள் செத்தாலும் பரவாயில்லை. நான் வருகிறேன், உங்கள் சந்திப்பிற்கு நன்றி’’ என்று சொல்லிவிட்டு வந்தார்கள்.
இந்தத் துணிச்சல், அந்த வீராங்கனையைத் தவிர, வேறு யாரிடத்திலும் காண முடியாது.
உள்துறை அமைச்சரின் முகத்திற்கு நேரே சொன்னார். அப்படிப்பட்ட ஓர் இயக்கம், இந்த இயக்கம்.
வடக்கே நடக்கலாம்; இங்கே அவர்களுடைய பாச்சா பலிக்காது!
ஏனென்றால், பல பேருக்கு இன்னும் இந்த இயக்கத்தைப்பற்றி சரியாகத் தெரியவில்லை. வடக்கே இருந்து வருகிறவர்கள் எல்லாம், புதிதாக வந்து, மிரட்டினால், விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது வடக்கே நடக்கலாம்; இங்கே அவர்களுடைய பாச்சா பலிக்காது.
புரட்சிக்கவிஞர் அவர்கள், நீண்ட நாள்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதினார்.
‘‘உன்னை விற்றுக் கொள்ளாதே!’’ என்ற தலைப்பில்.
அந்தக் கவிதையை படித்தால் தெளிவாகத் தெரியும். இன்றைக்கு நிறைய பேர் கட்சியையே விற்றுக் கொள்கிறார்கள். விற்பதைப் பற்றி கவலையில்லை. பொருளை அடமானம் வைத்தவர்கள், அந்தப் பொருளை மீட்கப் போனால், அடமானம் வாங்குகிறவர், அந்தப் பொருளை மீட்பதற்கு விடமாட்டார்.
இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஆகவேதான், அடமானம் வாங்கியவர் வடக்கே இருந்து இங்கே வருகிறார். அதனால்தான், இந்தியா விற்கே வழிகாட்டக்கூடிய முதலமைச்சராக இருக்கக்கூடிய நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய முதலமைச்சரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், ஓங்கி அடிக்கிறார்.
இந்த யுத்தம், இந்த அறப்போர் வெறும் தேர்தல் அல்ல; டில்லியா? தமிழ்நாடா? டில்லி அணியா? தமிழ்நாடா? என்று பார்க்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். முதுகெலும்புள்ள முதலமைச்சர்.
முதுகெலும்பு எல்லோருக்கும் இருக்கலாம். பெரியார் அவர்கள், ‘‘நீங்கள் ஒவ்வொருவரும் நிமிர்ந்து நடக்க வேண்டும்’’ என்று சொன்னார். ‘நிமிர்ந்து நில்’ அவ்வளவுதான், எங்களுக்குக் குனிந்து பழக்கம் கிடையாது. தமிழர்களில் நிறைய பேர் குனிந்தி ருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து, தேசியக் கவிஞரான நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் அவர்கள், ‘‘தமிழன் என்று சொல்லடா’’ என்றார். முதல் வரியில் அதைச் சொல்லிவிட்டு, ஏனென்றால், முதலியார் என்கிறான், கவுண்டன் என்கிறான், நாயுடு என்கிறானே தவிர, தமிழன் என்று சொல்வதில்லை.
‘தமிழன் என்று சொல்லடா,
தலை நிமிர்ந்து நில்லடா!’
தலை நிமிர்ந்து நில்லடா!’
‘தமிழன் என்று சொல்லடா’ என்று முதல் வரியில் சொல்லிவிட்டு, அடுத்த வரியில் ‘தலை நிமிர்ந்து நில்லடா’ என்றார். அதுதான் மிக முக்கியம். அதற்கு என்ன அர்த்தம்? தலை நிமிர்ந்தவனைப் பார்த்து, யாரும், ‘தலை நிமிர்ந்து நில்’ என்று சொல்ல மாட்டார்கள். யார் குனிந்து கொண்டு இருக்கிறானோ, குட்டக் குட்டக் குனிகின்றானோ, அவனைப் பார்த்துத்தான் சொல்வார்கள். ஏற்கெனவே குனிந்திருந்த நம் ஆட்களை, நிமிர்த்திய பெருமை இந்தத் திராவிட இயக்கத்துக்கு மட்டும் உண்டு.
(தொடரும்)
