ஒரத்தநாடு, மார்ச் 20- ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் தெற்குநத்தம் சு.குமரவேலின் தந்தையார் மறைவுற்ற ந.சுப்பிரமணியன் படத்திறப்பு நிகழ்ச்சி 17-02-2026 மதியம் 12.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜெயக்குமார் தலைமையேற்று உரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றினார்.
கழக மாநில வீதிநாடகக் கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், கழக மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், தஞ்சை மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர்
அ.அருணகிரி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய கழகத் தலைவர் இரா. துரைராஜ், அ.சுப்பிரமணியன், முனைவர் வே.ராஜவேல், கவிஞர் பகுத்தறிவுதாசன், ந.சண்முகம், கு.ஏகாம்பரம், வீதி நாடக கலைஞர் வே.தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோ.ஜெயசங்கர்,
ஆ.இரமேஷ் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
