மீன்சுருட்டி, மார்ச் 20- “திமுக வெல்லட்டும்”… திராவிட மாடல் தொடரட்டும்… என்ற தலைப்பில் அரியலூர் மாவட்டம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மீன்சுருட்டி கடைவீதியில் 14.3.2026 அன்று மாலை 6 மணியளவில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகரதலைவர் பெரியார் பெருந்தொண்டர் அ.சேக்கிழார் தலைமை யேற்க, மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன் வரவேற்புரையாற்றினார்.
கழகப் பொதுக்குழு உறுப்பினர் ராஜா. அசோகன், மாவட்ட தொழிலாளரணி துணைத் தலைவர் மா.கருணாநிதி, சம்போடை ராஜேந்திரன், மீன்சுருட்டி த.ராஜேந்திரன் வாழைகுட்டை கு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காப்பாளர் சி.காமராஜ், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் விடுதலை.நீலமேகன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.
சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்கள் வ.உ.சியின் தியாகம், தமிழ் மக்களின் வளர்ச்சியில் திராவிட இயக்கங்களின் பங்கையும், திமுக அரசின் திட்டங்களையும் சாதனைகளை விளக்கியும் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் ஆ. இளவழகன், அரியலூர் ஒன்றியத் தலைவர் சி.சிவக் கொழுந்து, செந்துறை ஒன்றியத் தலைவர் மு. முத்தமிழ்ச்செல்வன் தா.பழூர் ஒன்றிய துணைச் செயலாளர்
சி.தமிழ் சேகரன் தா.பழூர், ஒன்றிய துணைத் தலைவர் ஆசிரியர் இராஜேந்திரன், கீழப்பழுவூர் கே.எம். அன்பரசன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா, ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் தியாக. முருகன், துணைச் செயலாளர்த.கு.பன்னீர்செல்வம் வடலூர் வசந்த், காட்டுமன்னார்குடி ஒன்றியத் தலைவர் பொன். பஞ்சநாதன் ஒன்றிய செயலாளர் அறந்தாங்கி செல்வ கணபதி உள்ளிட்ட பொறுப்பாளர்களும் திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.
