“தொண்டறச் செம்மல்” அன்னை மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

புதுச்சேரி, மார்ச் 20- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழக மகளிரணி சார்பில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம் 16-03-2026 மாலை 6:30 மணியளவில் புதுச்சேரி , இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.விலாசினி தலைமை தாங்கி உரையாற்றினார். பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றத் துணை செயலாளர் வி.இளவரசி தொடக்கவுரை நிகழ்த்தி நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி அன்னை மணியம்மையார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். தொடர்ந்து கவிஞர் அனுமா அன்னை மணியம்மையார் வாழ்நாளில் நடைபெற்ற சிறப்பான சம்பவங்களை எடுத்துச் சொல்லி , அவரின் மனிதநேயம், இயக்கப்பற்று, தலைவர் தந்தை பெரியார் அவர்களை தன் வாழ் நாளெல்லாம் காத்து, பாதுகாத்த தொண்டறம், இயக்கப் பணி, இயக்கப் போராட்டம் என்று பல்வேறு செய்திகளை சொல்லி சிறப்புரை நிகழ்த்தினார்.

இறுதியாக க.ஜெயந்தி நன்றி கூறினார். திராவிடர் கழக மகளிரணி தோழியர் வெ. மீனா லோச்சினி 44-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், மாவட்டச் செயலாளர் தி.இராசா, காப்பாளர் இர. இராசு, துணைத் தலைவர் மு. குப்புசாமி, துணைச் செயலாளர் ஜெ.ஜீவன் சார்வாகனன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன் , செயலாளர் ஆ.சிவராசன் , மேனாள் கண்காணிப்பாளர் வீர.பாலகிருஷ்ணன், கவிஞர் சிவ. இளங்கோ, திராவிடர் கழக நகராட்சி கழகப் பொறுப்பாளர்கள் எஸ்.கிருஷ்ணசாமி, இரா. திருநாவுக்கரசு, தெ.தமிழ் நிலவன், தெ.வெற்றிவேல், இளைஞரணித் தோழர் இரா.தனசேகரன், பெரியார் பிஞ்சு இரா.பிரபாகரன், கவிஞர் கோ.கவியுகன், அ.ச.தினா, ப.பசுபதி தோழியர்கள் இள.அருள்மொழி, பா. அனிதா, ஜி. ஜெயந்தி, ஜெ. வாசுகி ஆகியோரும் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *