டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னிலை; மகாராட்டிரா, குஜராத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
* பல்கலைக்கழகங்களின் அதிகாரம் பறிபோகும் உயர்கல்வி மசோதா; கூட்டாட்சி கட்டமைப்பை மீறுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு. மசோதாவை வரைவு செய்யும் போது அமைச்சகம் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவில்லை. மசோதாவானது, வி.பி.எஸ்.ஏ-விற்கு வரம்பிற்கு அப்பாற்பட்ட அதிகாரங்களை வழங்குகிறது. மேலும் குறிப்பாக மாநில அரசின் அதிகாரங்களில் அத்துமீறுகிறது. இது அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக உள்ளது, என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்குதலுக்காக அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக மம்தா குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆந்திராவில் தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் ஜாதி அந்தஸ்து கோரிக்கை. தலித் கிறிஸ்தவர்களுக்கு கடந்த 77 ஆண்டுகளாக இடஒதுக்கீடு சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதாகவும், இது அம்மாநிலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* தலைநகர் டில்லியில் ஹோலிப் பண்டிகையால் உயிர் இழப்பு: ஹோலிப் பண்டிகையின் போது இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் காரணமாக, தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்துள்ள மேற்கு டில்லியின் இப்பகுதியில், “இப்போது எல்லாம் நலமாகவே இருக்கிறது; ஆனால் ஈத் பண்டிகை அன்று என்ன நடக்குமோ என்று தெரியவில்லை,” என்பதே அனைவரின் வாயிலும் ஒலிக்கும் பொதுவான புலம்பலாக உள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மகிழ்ச்சி நிறைந்த நாடு: பின்லாந்து முதல் இடம்; 147 நாடுகளில், இந்தியா 116ஆவது இடம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘நல்வாழ்வு ஆராய்ச்சி மய்யம்’ (WELLBEING RESEARCH CENTRE) வெளியிட்டுள்ள இந்த ஆண்டு ஆய்வறிக்கையின்படி, பின்லாந்து நாடு தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாகத் திகழ்கிறது.
– குடந்தை கருணா
