பெரியார் பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வல்லம், மார்ச் 20- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்டம்,தஞ்சாவூர் ஒன்றியத்தை சேர்ந்த சக்கரசாமந்தம், களிமேடு மற்றும் சீராளூர் ஆகிய கிராமங்களில் 25.02.2026 முதல் 03.03.2026 வரை “என் பாரதத்துக்கான இளைஞர்கள்” மற்றும் “டிஜிட்டல் கல்வியறிவுக்கான இளைஞர்கள்” என்ற தலைப்பில் 7 நாட்கள் நடைபெற்றது.

சிறப்புமுகாமின் துவக்க விழா 25.02.2026 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி தலைமையுரை ஆற்றினார். சக்கரசாமந்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  ராஜசேகர் வாழ்த்துரை வழங்கினார். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா மற்றும் முதன்மையர் கோ.இராஜாராமன் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்தார்கள். அன்று பிற்பகல்  க.கண்ணன், ஆலோசகர் மக்கள் தொடர்பு அதிகாரி, மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர்  அவர்களால் கிராம மக்களிடையே குருதி (இரத்த) கொடை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அன்று மாலை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்பு வழி  முறைகள் பற்றிய சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

கண் பரிசோதனை
முகாம்

26.02.2026 அன்று காலை தஞ்சாவூர் அகர்வால் கண்மருத்துவமனை மருத்துவக்குழு கலந்து கொண்ட இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.

அன்று பிற்பகல் தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை அய்சிடிசி கவுன்சிலர் எம்.வேதிபிரபு மாணவர்களிடையே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாலை இப்பாலிடெக்னிக் கணித விரிவுரையாளர் ப.சாந்தி ஒன்றிய, மாநில அரசின் நலத்திட்டங்கள் பற்றிய சிறப்புரை நிகழ்த்தினார்.

இலவச பொது
மருத்துவ முகாம்

27.02.2026 அன்று காலை தஞ்சாவூர் A to Z மருத்துவமனை குழு இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமில் 200க்கு மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்றனர். அன்று மாலை பெரியார் பாலிடெக்னிக் கணிதவியல் விரிவுரையாளர் க.நீலாவதி தனது சிறப்புரை வாயிலாக மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

28.02.2026 அன்று காலை பெரியார் பாலிடெக்னிக் மாணவர் ஆலோசகர் எஸ்.மைக்கேல்ராஜ் சுகாதார விழிப்புணர்வு பற்றிய சிறப்புரை நிகழ்த்தினார். அன்று பிற்பகல் பெரியார் பாலிடெக்னிக் முதுநிலை விரிவுரையாளர்  ரெ.அய்யநாதன் தலைமைப் பண்பு வளர்த்தல் என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.அன்று மாலை வல்லம், புகையிலை தடுப்பு மய்ய வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  மு.சிங்காரவேல் புகையிலை ஓர் பேரழிவு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

ஒழுக்கம்
உயர்வு தரும்

01.03.2026 அன்று காலை பூதலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்  த.செந்தில்வேலன் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் மருத்துவர் ஆர்.ஜி.கிரிதர பிரசாத் யோகாபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மாணவர்களுக்கு யோகா பயிற்சியும் அளித்தனர்.

பிற்பகல் வீட்டு உபயோக இயந்திரங்கள் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. அன்று மாலை பெரியார் பாலிடெக்னிக் முதன்மையர்  கோ.இராஜாராமன் ஒழுக்கம் உயர்வு தரும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

02.03.2026 அன்று காலை பெரியார் பாலிடெக்னிக் அமைப்பியல் துறைத் தலைவர்  க. கார்த்திக் மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினார். பிற்பகல் பெரியார் பாலிடெக்னிக் இயந்திரவியல் துறை விரிவுரையாளர் சு.சுந்தரவள்ளி தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அன்று மாலை சக்கரசாமந்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு திறனறிவு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இலவச கால்நடை
மருத்துவ முகாம்

03.03.2026 அன்று காலை தஞ்சாவூர் கால்நடை மருத்துவப்பணி உதவி இயக்குநர்  ப.சரவணன் தலைமையில் மருத்துவக்குழு கலந்து கொண்டு இலவச கால்நடை மருத்துவ முகாமில் கிராமத்தில் இருக்கும் கால்நடைகளுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட்டது. மேலும் சக்கரசாமந்தம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

அன்று மாலை நடைபெற்ற முகாம் நிறைவு விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்  பெ.மாதவன் வரவேற்புரை ஆற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்  ரெ.நடராஜன் முகாம் இணைப்புரை ஆற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட ஆர்வலர் செல்வன் நா.நவீன்ராஜ் முகாம் அறிக்கை வாசித்தளித்தார். நிறைவு விழாவில்  பெரியார் பாலிடெக்னிக் முதல்வர்  க.ப.வெள்ளியங்கிரி தலைமையேற்று உரையாற்றினார். பெரியார் பாலிடெக்னிக் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா விழாவில் முன்னிலை வகித்தார். இப்பாலிடெக்னிக் முதன்மையர்  கோ.இராஜாராமன் வாழ்த்துரை வழங்கினார். போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மற்றும் 100 திருக்குறளை ஒப்புவித்து அனைவரின் மனதையும் கவர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிக்கு பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் பணப்பரிசுகளை வழங்கினார்கள். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஞா.செங்கொடி நன்றியுரை ஆற்ற நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *