நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதராகுங்கள்; பிறகு உடைமையைச் சரி சமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில் அதிக உடைமைக்காரர்களாக இருந்தும் அனேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை. உடைமை வரும்; போகும், தற்செயலாய், இழிவு அப்படி அன்று. ஆகவே, ஒரு காலணா உயர்வுக்காக அடிபட்டுச் சாவதைவிட, அவன் ஏன் மேல்சாதி, அவன் ஏன் முதலாளி, நான் ஏன் தொழிலாளி என்று கேட்பதில் உயிர் விடுங்கள்.
‘விடுதலை’ 29.2.1948