வேட்பாளர்கள் செலவுப் பட்டியல் உணவுப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்த தேர்தல் ஆணையம் சிக்கன் பிரியாணி – ரூ.110  மட்டன் பிரியாணி – ரூ.180

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.18 வேட்பாளர் செலவு குறித்த கணக்கீட்டுக்காக தேர்தல் ஆணயம் நிர்ணயித்துள்ள உணவுகளின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிக்கன் பிரியாணி ரூ.110, மட்டன் பிரியாணி ரூ.180 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்களின் செலவுக் கணக்கை கண்காணிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆண யம் உணவுப் பொருட்களின் விலை ப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி:காபி – ரூ.18 டீ, –ரூ.12 இட்லி (2) – ரூ.40சப்பாத்தி அல்லது பூரி (2) – ரூ.60, பொங்கல் –ரூ.50, வைடா –ரூ.15 சைவ சாப்பாடு ரூ.110, அசைவ சாப்பாடு –ரூ.350,  வெஜ் பிரியாணி ரூ.50, கலவை சாதம் –ரூ.45 சிக்கன் பிரியாணி – ரூ.110, மட்டன் பிரியாணி – ரூ.180, குடிநீர் பாட்டில் – ரூ.15

மேற்கண்ட விலைப்பட்டியல் அடிப்படையில்தான் வேட்பா ளர்களின் தேர்தல் செலவுகள் கணக்கிடப்படும். மேலும், பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும், பட்டாசு வெடிப்புக்கும் செலவு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட ஆட்டங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப கட்ட ணத்தை நிர்ணயித்துள்ளனர்.

சென்னை மாவட்டத்துக்கான தனிப்பட்ட பட்டியல்

சென்னை மாவட்ட வேட் பாளர்களுக்காக தேர்தல் ஆணயம் தனி செலவினப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி: பிரச்சாரத்தின் போது வேட்பாளருக்கு அணிவிக்கப்படும் சால்வைக்கு ரூ.150 பெரிய அளவி லான மலர் மாலைக்கு ரூ.400

ஆப்பிள் மாலை அணிவிக்கப் பட்டால், ஒரு ஆப்பிள் ரூ.35 என கணக்கிடப்படும்

உணவு விலைகள்:கலவை சாதம் (ஒரு பாக்ஸ்) – ரூ.50 இனிப்பு (100 கிராம்) – ரூ.90, சிறிய பாட்டில் குடிநீர்  ரூ.7, பட்டாசு: ஆயிரம் வாலா பட்டாசு வெடித்தால் – ரூ.650

மற்றவை: வாழைமர தோர ணத்திற்கு ஒரு வாழை – ரூ.750, பிளாஸ்டிக் இருக்கைக்கு – ரூ.11, சொகுசு இருக்கைக்கு – ரூ.165 (வாடகை) – தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சட்டப்பேரவைத் தேர் தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விலைப்பட்டியல் அடிப்படையில் தங்களின் தேர்தல் செலவுக் கணக் குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *