பெங்களூரு, ஏப். 10 – கருநாடக மாநிலத்தின் 16ஆவது சட்டப்பேரவை பொது தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப். 13ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இரண்டு கட்டங்களாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. முதல் கட்ட பட்டியலில் 124 வேட்பாளர்களும் இரண் டாவது கட்ட பட்டியலில் 42 வேட்பா ளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பட்டியலில் மீதியுள்ள 58 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். ஆளும் பார திய ஜனதா கட்சி விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் 93 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் வெளியிட்டுள்ளது. இது தவிர ஆம் ஆத்மி, இடதுசாரி கட் சிகள் உள்ளிட்ட சில கட்சிகளும் வேட் பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.
வாக்குறுதிகள் அள்ளி வீசும் கட்சிகள்
மாநில சட்ட பேரவை தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் காங்கிரஸ் சார்பில் முதல் கட்டமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவி தொகை, ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவச மின்சாரம், படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயி ரம் உதவி தொகை, பிபிஎல் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்ற நான்கு வாக்குறு திகள் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கி ரஸ் கட்சியின் வாக்குறுதிகளால் பெண் கள் மத்தி யில் ஆதரவு பெருகி வருகிறது.
கடந்த ஒரு மாதமாக பாஜக மற்றும் மஜத கட்சியில் இருந்து பேரவை மற் றும் மேலவை உறுப்பினர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார் கள். பல்லாரி மாவட்டம், கூட்லகி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்த என்.ஒய். கோபாலகிருஷ்ணா, பதவி விலகலுக்குப்பின் காங்கிரஸ் கட் சியில் இணைந்தார். வரும் தேர்தலில் முளகல்மூரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்துள்ள பாபுராவ் சிஞ்சனசூ ருக்கு கல்புர்கி மாவட்டம், குருமிட்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
துமகூரு மாவட்டம், குப்பி சட்ட பேரவை தொகுதி மஜத உறுப்பினராக இருந்த எஸ்.ஆர்.சீனிவாஸ், பதவியிலி ருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அவருக்கு மீண்டும் குப்பி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
சித்ரதுர்கா தொகுதி மஜத சட்ட மன்ற உறுப்பினர் வீரேந்திரா பதவி விலகி காங்கிரசில் இணைந்தார். அவ ருக்கு சித்ரதுர்கா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மண்டியா மாவட்டம், மேல்கோட்டை தொகுதி சர்வோதய கருநாடக கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தர்ஷன் புட்டணையா, அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அவருக்கு மீண்டும் மேல்கோட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2018இல் நடந்த தேர்தலில் கோலார் மாவட்டம், முல்பாகல் தொகுதியில் சுயேட்சையாக போட்டி யிட்டு வெற்றி பெற்று பாஜ ஆட்சியில் அமைச்சராக இருந்த எச்.நாகேஷ், பாஜகவிலிருந்து விலகி காங்கிர சில் இணைந்தார். அவருக்கு மகாதேவபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையில் மதசார் பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சிவலிங்க கவுடா (சக் லேஷ்புரா), சீனிவாஸ் கவுடா (கோலார்), ரமேஷ் பண்டி சித்தனகவுடா (ரங்கபட் டண) மற்றும் பாஜக மேலவை உறுப்பினர் ஆயனூர் மஞ்சு நாத் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள் ளனர். இரண்டொரு நாளில் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளனர். அதே சமயத்தில் அரகல கூடு தொகுதி மஜத சட்டமன்ற உறுபபினராக இருந்த ஏ.டி. ராமசாமி, பாஜகவில் இணைந் துள்ளார். பெங்களூரு நகரம், பெங் களூரு ஊரகம், கோலார், மைசூரு, கல்புர்கி, யாதகிரி, பாகல்கோட்டை, பெலகாவி, கதக், கொப்பள், தாவ ணகெரே, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக மற்றும் மஜத சார்பில் கவுன் சிலர்களாக இருப்பவர்கள் அலை அலையாக காங் கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார் கள். பாஜகவிலிருந்து மேலும் சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலரும் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயத்தில் காங்கிரஸ் கட் சியில் இருந்து முக்கிய விக்கெட்களை வீழ்த்த பாஜக மேற்கொண்டுவரும் முயற்சி தோல்வி யில் முடிந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.