டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கீழடியில் 11ஆவது கட்ட அகழாய்வு நடத்த மாநில தொல்லியல் துறைக்கு ஒன்றிய தொல்லியல் துறை அனுமதி!! தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ‘மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் எண்ணிக்கை குறையும். அவர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு அவர்களுக்குத் தகுந்த பதிலடி கிடைக்கும். திரிணாமுல் காங்கிரஸ் அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும். நாங்கள் 226-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்’ என மம்தா உறுதி.
* அரசை கலந்து ஆலோசிக்காமல் மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது, மம்தா கண்டனம்.
* ஈரான் நாட்டின் மீது தாக்குதல், டிரம்ப் நடவடிக்கையைக் கண்டித்து அவரது நெருக்கமான அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படும் ஜோ கென்ட், பதவி விலகல்: ஈரான் நமது நாட்டுக்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் தரவில்லை. இஸ்ரேல் மற்றும் அதன் சக்தி வாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தம் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகத் தெரிகிறது என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தி இந்து:
* திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி வரை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை.
* கே.சி.தியாகி பதவி விலகல்: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நண்பரும், அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான கே.சி. தியாகி அந்த கட்சியில் இருந்து விலகி விட்டார். மார்ச் 22இல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை.
தி டெலிகிராப்:
* முஸ்லிம்களை புறக்கணிக்க உறுதிமொழி: மகாராட்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு, மக்கள் முழக்கங்களை எழுப்பி, முஸ்லிம்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புறக்கணிப்பதாக உறுதிமொழி எடுக்கும் காட்சிப் பதிவு ஒன்று, கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மாற்றுத்திறனாளிகள் குறித்த தரவுகளை பதிவு செய்ய 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்குகிறது என்கிறார் ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
. குடந்தை கருணா
