தஞ்சை, மார்ச் 18- தஞ்சை குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு, பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் நினைவுநாள், நூல்கள் வெளியீடு, வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட புரவலர் நெல்லுப்பட்டு.அ.இராமலிங்கம் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
அன்னை மணியம்மையார் படத்தினை திறந்து வைத்து மாவட்ட மகளிரணித் தலைவர் அ.கலைச் செல்வி உரையாற்றினார்.
மாவட்ட கழகத் தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டத் தலைவர் பி.எஸ்.ஆர்., விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி. எம்.குணசேகரன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.அஞ்சுகம், பொறியாளர் ப.பாலகிருட்டிணன், பூதலூர் ஒன்றிய துணைச் செயலா ளர் ப. விஜயகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
பெண்ஏன்அடிமையானாள்?, பெண்கள் முன்னேற்றத்திற்கு தந்தை பெரியார் செய்தது என்ன?, அறிஞர் அண்ணாவின் உயில் ஆகிய மூன்று புத்தகங்களை வெளியிட்டு, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் ச.நர்மதா சிறப்பான ஆய்வுரை வழங்கினார்.
தமிழ்நாடு ஆசிரியர் முன் னேற்ற சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.இரகமத்துல்லா முதல் பிரதிகளை பெற்றுக் கொண் டார். வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டச் செயலாளர் அழகு.ஆ.இராமகிருட்டிணன் வர வேற்றார்.
பொருளாளர் பேரா.கு.குட்டிமணி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் ப. நரேந்திரன் மாநகர செயலாளர் இரா. வீரக்குமார் மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க.துணைச்செயலாளர் ஆ.இலக்குமணன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, மாவட்ட கழக துணைச் செயலாளர் சுப்பிரமணியம் புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி. கலைச்செல்வன், செயலாளர் விஏஓ துரை, கட்டடக் கலைஞர் கா.முத்துகிருட்டிணன், முனைவர் க.இந்திரா, இரா.பரந்தாமன், மன்னை சித்து, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் குழந்தைசாமி ஆகியோர் பங்கு பெற்று சிறப்பித்தார்கள் 150 புத்தகங்களை வாசகப்பெருமக்கள் வாங்கி மகிழ்ந்தார்கள்.
