தெற்கு மத்திய ரயில்வேயில் காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெக்கானிக், பெயிண்டர், பிட்டர் உள்பட மொத்தம், 2,801 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10ஆம் வகுப்பு மற்றும் அய்டிஅய் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இந்தியன் ரயில்வே உள்ளது. ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பணியிடங்கள் விவரம்:
ஏசி மெக்கானிக் – 251, கார்பெண்டர் – 22, COPA – 181, டீசல் மெக்கானிக் – 105, எலக்ட்ரீஷியன் – 1258, எலக்ட்ரானிக் மெக்கானிக் – 88, ஃபிட்டர் – 539, இண்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் – 33, மெஷினிஸ்ட் – 54, MMTM – 24, மோட்டார் மெக்கானிக் – 12, பெயிண்டர் – 32, வெல்டர் – 202 என மொத்தம் 2801 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்தும் பயிற்சி பணியிடமாகும்.
கல்வித் தகுதி:
ஏப்ரல் 11, 2026 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு (SSLC) தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் அய்.டி.அய் (ITI) சான்றிதழ் பெற்றிருப்பதும் கட்டாயமாகும்.
குறிப்பாக, ஏசி மெக்கானிக் பதவிக்கு மெக்கானிக் அய்.டி.அய், கார்பென்டருக்கு கார்பெண்டர் அய்.டி.அய், COPA-விற்கு “கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA)” அய்.டி.அய் சான்றிதழ்கள் தேவை.
வயது வரம்பு:
ஏப்ரல் 11, 2026 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 15 வயதுக்குக் குறையாமலும், 24 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி (என்சிஎல்) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுப் பிரிவில் 10 ஆண்டுகள், ஓபிசி பிரிவில் 13 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி பிரிவில் 15 ஆண்டுகள் வரை அதிகபட்ச வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு முறை
மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதிம், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் http://www.scr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் ‘Careers’ பக்கத்தின் மூலம், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் படித்த பின்பு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.100/-அய் இணைய தளம் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 12, 2026 முதல் ஏப்ரல் 11, 2026 வரை இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.scr.indianrailways.gov.in/ இல் பார்க்கலாம்.
