சென்னை அய்அய்டியில் வேலை.. ஆசிரியர் பணியிடங்கள்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை அய்அய்டியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி ஆசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

நாட்டில் உள்ள உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை அய்அய்டி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அய்அய்டியில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

அய்அய்டி மெட்ராசில் வேலை

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் செயல்படும் இந்த கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அய்அய்டி கல்வி நிறுவனத்தில் ஏற்படும் காலியிடங்கள் அரசு விதிகளை பின்பற்றி நிரப்பப்படுகிறது.

அந்த வகையில், தற்போது அங்கு காலியாக உள்ள 40 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

* வான்வெளி பொறியியல்

* பொறியியல் வடிவமைப்பு

* பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிர் மருத்துவ பொறியியல் மனிதவியல் மற்றும் சமூக அறிவியல்

* உயிரி தொழில்நுட்பம்

* மேலாண்மை ஆய்வு

* வேதியியல்

* மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

* இரசாயன பொறியியல்

* இயந்திர பொறியியல்

* சிவில் பொறியியல்

* உலோகவியல் மற்றும் பொருள் பொறியியல்

* கணினி அறிவியல் மற்றும் பொறியியல்

* கடல் பொறியியல்

* தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு

* இயற்பியல்

* மின்பொறியியல்

* பல்துறை ஆய்வுகள் பள்ளி

ஆகிய பிரிவுகளில் உதவிப் பேராசிரியர் (கிரேடு 1, 2) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி

உதவி ஆசிரியர் கிரேடு 2, உதவிப் பேராசிரியர் (கிரேடு I) -பணிக்கு துறை சார்ந்த பிரிவில் முனைவர் பட்டம் பெற்று இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம். மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 27.03.2026 தேதிப்படி 36 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், ஓபிசி பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.

* உதவிப் பேராசிரியர் (கிரேடு II) – ரூ.70,900

* உதவிப் பேராசிரியர் (கிரேடு I) – ரூ.1,01,500/-

தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 27.03.2026 கடைசி நாளாகும். தகுதியுள்ள பேராசிரியர்கள் அய்அய்டி கல்வி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். https://facapp.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் கேரியர்ஸ் என்ற பக்கத்தில் தேர்வு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://facapp.iitm.ac.in/img/Advertisement_RA-2026.pdf

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *