ஆண்டிமடம், மார்ச் 18– “திமுக வெல்லட்டும்”… திராவிட மாடல் தொடரட்டும்.. என்ற தலைப்பில் அரியலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக ஆண்டி மடம் பேருந்துநிலையம் அருகில் 13.3.2026 வெள்ளி மாலை 6 மணிய ளவில் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் தியாக.முருகன் தலைமையேற்க, மாவட்ட துணைச் செயலாளர் க.கார்த்திக் வரவேற்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் கோ. பாண்டி யன், நகரத் தலைவர் ந.சுந்தரம் அமைப் பாளர் டைல்ஸ்பட்டுசாமி, மாவட்ட இளைஞர் அணித் துணை தலைவர் கசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
மாவட்ட செயலாளர் மு.கோபால கிருஷ்ணன், மாவட்ட தலைவர் விடுதலை.நீலமேகன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் திராவிட இயக்கங்களின் பங்கையும், திமுக அரசின் திட்டங்களையும் சாதனைகளை விளக்கியும் பா.ஜ.க. தமிழ்நாட்டை வஞ்சிப்பதை விளக்கி யும் சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை நன்றி கூறினார்.
பொதுக்குழு உறுப்பினர் இரத்தின ராமச்சந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ. இளவழகன், மாவட்ட தொழிலாளர் அணி துணைத் தலைவர் மா.கருணா நிதி அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ் செல்வன் ஜெயங்கொண்டம் நகரத் தலைவர் துரை.பிரபாகரன், தாப்பழூர் ஒன்றிய துணைச்செயலாளர் சி. தமிழ் சேகரன் தாப்பழூர் ஒன்றிய துணைத் தலைவர் இராஜேந்திரன், கீழப்பழுவூர் கே எம் அன்பரசன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர்மு.ராஜா, ஆண்மடம் ஒன்றிய துணைச் செயலாளர்த.கு.பன்னீர்செல்வம் வடலூர் வசந்த் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் திர ளான பொதுமக்களும் பங்கேற்றனர்.
