தமிழர் தலைவர் தலைமைப் பொறுப்பில் பொன்விழா நோக்கி…

1 Min Read

திராவிடத்தின்         வேரறுக்க

திட்டமிடும்            ஆரியத்திற்கு

குரல்வளையில்        சுருக்கேற்றி

திராவிடர்க்கு          வாழ்வளித்த

அறிவாசான்           பெரியாரின்

திராவிடர்              கழகத்திற்கு

தமிழர்                 தலைவர்

மானமிகு              ஆசிரியர்

தலைமைப்            பொறுப்பேற்று

நாற்பத்து               ஒன்பதாண்டு

அடுத்தாண்டு          அய்ம்பதாண்டு

தலைமைப்            பொறுப்பிற்கு

பொன்விழா            ஆண்டு

திராவிடர் கழகம்

அய்யாவின்           இயக்கத்தில்

அடியெடுத்து          வைத்து

எண்பத்து              மூன்றாண்டு

இன்று                  பயணிப்பது

தொன்னூற்று          மூன்றாமாண்டு

தமிழர்                 தலைவர்

தலைமை              ஏற்றபின்

பகுத்தறிவுமேதை     பெரியார்

பன்னாடு               பயணித்தார்

சட்டங்களில்           இடம்பிடித்தார்

ஆல்ப்ஸ்               மலையில்

எதிர்                   ஒலித்தார்

ஆக்ஸ்போர்டில்       அலங்கரித்தார்

அய்நாமன்றத்தார்     ஆய்வுசெய்தார்

திராவிடர் கழகம்

அழியாப்புகழ்         சான்றளித்தார்

மண்டல்               பரிந்துரைக்கு

உயிர்                  கொடுத்தார்

மகளிர்                 உரிமைக்கு

மாநிலத்தில்            இடமளித்தார்

சமூகநீதிக்கு           சமர்புரிந்தார்

சர்க்காருக்கு           சமூகநீதிக்கான

சட்டத்தையே          வரைந்தளித்தார்

அனைவரும்           அர்ச்சகராக

அனுதினமும்          உழைக்கிறார்

ஆரிய                 இனத்தார்

அனலாக              துடிக்கிறார்

திராவிடர்              மாடலாட்சி

திராவிடத்தில்          தமிழராட்சி

மீண்டும்               மலர்ந்திட

தேர்தல்                பிரச்சாரத்தில்

மாநிலத்தை            வலம்வந்து

நாட்டைக்              குலுக்கிட

நாள்குறித்து           காத்திருக்கிறார்

தி.மு.க.அணி          வெற்றிபெற்று

திராவிடர்              ஆட்சியமையும்

தலைமைப்            பொறுப்பேற்ற

பொன்விழா            ஆண்டில்

திராவிட               மாடலாட்சி

நாட்டுக்கே             மாடலாக

வரலாற்றில்            மிளிரும்

வைரக்கல்வெட்டாய்  ஒளிரும்!

தமிழர்தலைவர்        தலைமையில்

பெரியார்உலகம்       அமையும்!

 

– முனைவர் க.அன்பழகன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *