கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’ புதிய படிப்பு தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி!

1 Min Read

சென்னை, மார்ச் 18– கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’ என்ற புதிய படிப்பை வரும் கல்வி ஆண்டில் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதாரத் துறை செயலர் பி. செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

புதிய படிப்பு

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் 2016 ஆம் ஆண்டு முதல் ‘எம்.ஃபில். கிளினிக்கல் சைக்காலஜி’ படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படிப்புக்கு பதிலாக ‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’ என்ற பெயரில் புதிய படிப்பை வழங்குமாறு இந்திய மறுவாழ்வுக் கவுன்சில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை அறிவுறுத்தியுள்ளது.

அதன் பேரில், ஆண்டுதோறும் 18 மாணவர்களை சேர்க்கும் வகையில், 2026-2027 கல்வி ஆண்டில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை தொடங்குமாறு, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மூலமாக, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை இயக்குநரின் கருத்துரு அரசுக்கு வரப்பெற்றது.

அக்கருத்துருவை ஏற்று, 2026-2027 கல்வி ஆண்டில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை தொடங்கவும், ஆண்டுதோறும் 18 மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் அரசு அனுமதி அளிக்கிறது.

இப்புதிய படிப்புக்கு இந்திய மறுவாழ்வுக் கவுன்சிலும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திடமும் உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *