புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாட்டுடன் இணைத்து நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. கடிதம்!

1 Min Read

சென்னை, மார்ச் 18- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாட்டுடன் இணைத்து நடத்தக் கோரித் தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

இதுதொடர்பாக புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் சிவா தேர்தல் ஆணையத்துக்கு  அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்தல்கள் பெரும்பாலும் ஒரே நாளில் நடத்தப்பட்டு வந்துள்ளன. இந்த அணுகுமுறையிலிருந்து விலகுவதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

தற்போதைய புதுச்சேரி சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜூன் 15 வரை நீடிக்கும். இப்படியிருக்க, தேர்தலை அட்ட வணையை முன்னிட்டு நடத்துவதில் உள்ள அவசரத்தை விளக்க வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில், 28 தொகுதிகள் புவியியல் ரீதியாக தமிழ்நாட்டுக்குள் அமைந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இரண்டு வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடத்துவது பிரச்சாரம், வெளிநாட்கள் நட மாட்டம், வாக்காளர் ஆள்மாறாட்ட அபாயங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்ட சவால்களை உருவாக்கக்கூடும்.

எனவே, புதுச்சேரி வாக்குப்பதிவு தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி இணைத்து நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் வேலை நாளாக வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி புதுச்சேரி வாக்குப்பதிவு நடத்தினால், இங்கிருந்து தமிழ்நாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு உறுதி செய்ய வேண்டும்.

மேலும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், வேட்பு மனு செயல்முறைக்கு நியாயமான கால அட்டவணையை தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *