எம்.பி, எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியை விடுவிக்கத் தடை! தேர்தல் ஆணையம் பிறப்பித்த அடுத்தடுத்த உத்தரவுகள்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 18– தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23.4.2026ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் 15.3.2026 அன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டவரப்பட்டுள்ளது. 15.3.2026 அன்று மாலை தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்கத் தடை

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு புதிதாக நிதி ஒதுக்கவும், பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு தேர்தலில் சட்டவிரோத பணம் விநியோகத்தை தடுத்து கண்காணிக்கும் பணியில் ஒன்றிய வருமான வரித்துறை, ஒன்றிய தொழிலக பாதுகாப்பு படை, தபால் துறை, விமானத்துறை, கடலோர காவல் படை உள்ளிட்ட ஒன்றிய அமைப்புகளுக்கு ஈடுபடவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அஞ்சல் ஓட்டு – பணியை தொடங்க வேண்டும்

மேலும் ரயில்வே ஊழியர்கள், அகில இந்திய வானொலி, மெரைன் பிரிவு, விமான நிலைய ஊழியர்கள், தகவல் ஒளிபரப்பு துறை, பத்திரிக்கையாளர், மெட்ரோ ரயில், போக்குவரத்து துறை, மின்வாரியத்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை உள்ளிட்டவர்களுக்கு அஞ்சல் வாக்குகளை செலுத்த உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேடுகள் குறித்த விழிப்பை ஏற்படுத்த தேர்தல் நடைபெறும் அய்ந்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

தேர்தல் பிரச்சார அனுமதியை இணைய வழியில் பெற வேண்டும்

தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

சென்னை, மார்ச் 18- தேர்தல் பிரச்சார அனுமதியை இணைய வழியில் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று, அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள்

சென்னை மாவட்டத்தில் அமலில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் விளக்கும் கூட்டம், மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் 16.3.2026 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முடிவில் குமரகுருபரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28.30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதிகளில் 4,085 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறையினர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கொண்ட 375 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் வாக்கு இயந்திரங்களை தயார் செய்யும் பணி, வாக்கு இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைத்தல், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், வாக்கு எண்ணும் மய்யத்துக்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும். வாக்குச்சாவடி அலுவலர்கள் 16,500 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தொகுதி வாரியாக பயிற்சி அளிக்கப்படும்.

சென்னை மாவட்டத்தில் 13,634 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 6,349 கட்டுப்பாட்டுக் கருவிகளும் சரிபார்க்கப்பட்டு இருப்பில் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் என்ற வீதம் 48 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவை, தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் வீதம் 48 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், வாகனத் தணிக்கையில் ஈடுபடும். தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்.

ஒவ்வொரு செலவினத்துக்கான விலைப்பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக பேரணி, கூட்டம் நடத்த உள்ள இடங்கள், காவல் துறை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒற்றைச்சாளர முறையில் கூட்டங்கள் நடத்துவது, வாகனங்களை பயன்படுத்துவது போன்றவற்றுக்கு உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

வேட்பாளர்கள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல் போன்ற 6 வகையான இனங்களுக்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் சுவிதா (Suvidha) என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *