‘சங்கமம்’ கலைத் திருவிழா கலைக்குழுக்கள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 17– சென்னை உட்பட காஞ்சிபுரம், சேலம், கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மண்டலங்களில் சங்கமம் விழா நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2026ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  கலை பண்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான artandculture.tn.gov.in என்பதில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்தப் பகுதி கலை பண்பாட்டுத் துறை மண்டல அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

கலைக்குழுக்கள் தங்களின் திறமையை நிரூபிக்கும் வகையில் 5 நிமிட காட்சிப் பதிவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

மண்டல அளவிலான தேர்வு: கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவினர், தகுதியான குழுக்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

மாநில அளவிலான வாய்ப்பு: முதற்கட்டமாக மற்ற மாவட்டங்களில் நடக்கும் விழாக்களில் இக்குழுக்கள் பங்கேற்பர். அதில் சிறப்பாகச் செயல்படும் குழுக்கள், மாநில தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, 2027-ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்கப் பரிந்துரைக்கப்படுவர்.

தமிழ்நாட்டின் கலை நயத்தைப் பறைசாற்றக் காத்திருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *