ஒன்றிய பிஜேபி அரசால் ஏற்பட்ட நெருக்கடி! பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை உயர்வால் ஏற்றுமதியாளர்கள் கவலை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பூர், மார்ச் 17- பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் மூலமாக ஆண்டுக்கு சுமார் ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் திருப்பூரில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பின்னலாடை உற்பத்தியின் மூலப் பொருளான நூலின் விலையை அடிப்படையாகக் கொண்டே ஆடைகளின் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

நூல் விலை உயர்வு

பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை மாதம்தோறும் 1 மற்றும் 16ஆம் தேதிகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, மார்ச் இரண்டாவது பகுதிக்கான நூல் விலையை நூற்பாலைகள் நேற்று (16.3.2026) வெளியிட்டன.இதில், பின்னலாடைகள் உற்பத்திக்கான அனைத்து வகையான நூல்களின் விலையும், கிலோவுக்கு ரூ.7 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பின்னலாடை உற்பத்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: நூல் விலையானது பிப்ரவரி மாதம் கிலோவுக்கு ரூ.7 உயர்த்த நிலையில், தற்போது மேலும் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, போர் காரணமாக ஏற்றுமதி செய்யப்பட்ட பின்னலாடைகள், வர்த்தகர்களுக்குச் சென்றடையாமல் பல்வேறு இடங்களில் தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில், நூல் விலை உயர்ந்துள்ளது.

நூல் விலையைக் கணக்கிட்டே ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்கிறோம். இந்த சூழலில் விலை உயர்ந்திருப்பது தொழிலை பெரிதும் பாதித்துள்ளது. நூல் விலையை சீராக வைத்திருக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *