சென்னை, ஏப். 10- சென்னை கண்ணகி நகரில் உள்ள முதல் தலைமுறை கற்றல் மய்யத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற் றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்க ளிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் முதலமைச் சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,800 மருத்துவமனைகள் உள் ளன. இத்திட்டத்தில் 1,500 சிகிச்சைகள் அளிக்கப்படுகின் றன. குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படு கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்ச மாக ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிரதமர் காப்பீடு, முதலமைச்சர் காப்பீடு ஆகிய இரு திட்டங்களும் இணைந்து செயல்படுகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படு கிறது. சோழிங்க நல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கண் ணகி நகர், எழில் நகர் பகுதி களில் 6 இடங்களில் மருத் துவ முகாம் நடைபெறுகிறது. இதில் பல், கண், காது மூக்கு தொண்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பரிசோதனை செய்யப்படு கிறது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மருத்துவர் பற்றாக்குறையை போக்க, 1,021 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்மாத இறுதியில் நடக்கும் தேர்வில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்தியாவி லேயே தமிழ்நாட்டில்தான் சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட உள்ளது. மற்ற மசோதாக்கள்போல, சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கான மசோதாவையும் ஆளுநர் முடக்கி வைத்து உள்ளார். நாடு முழுவதும் நாள்தோறும் கரோனா தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. ஒருவேளை, தொற்று ஏற்பட்டாலும், ஒரு வாரத்தில் குணமடைந்துவிடலாம். எனவே, மக்கள் அச்சமடைய வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 1ஆம் தேதி முதல் மருத்துவமனை களில் முகக் கவசம் கட்டாய மாக்கப் பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசத்தை கட்டாயமாக்கும் அவசியம் தற்போது இல்லை. தேவைப் படும்போது கட்டாயமாக்கப் படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், தேசிய நல வாழ்வு குழும திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.