கல்வியோடு கைகோக்கும் தொழில் வழிகாட்டுதல்: திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் வரலாற்றுச் சாதனை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, மார்ச் 17- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) ஒரு பகுதியான பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை மற்றும் போதிப்ரிட்ஜ் நிறுவனம் இணைந்து நடத்திய தொழில் வழிகாட்டுதல் (Career Counseling Certification Training) பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

பயிற்சியின் பின்னணி
மற்றும் நோக்கம்:

தற்போதைய கல்விச் சூழலில் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். மாணவர்களின் ஆர்வத்தையும் திறனையும் கண்டறிந்து, அவர்க ளுக்குச் சரியான தொழில்முறை வழிகாட்டுதலை வழங்கும் நோக்கில் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 27ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10ஆம் தேதி வரை இணையவழியில்  இப்பயிற்சி நடைபெற்றது.

பயிற்சிப் பெற்றோர் விவரம்:

இப்பயிற்சியில் இப்பள்ளியைச் சேர்ந்த நான்கு பேர் திறம்படப் பங்கேற்றுத் தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்:

பள்ளி முதல்வர். முனைவர் க.வனிதா

நா. அருண் பிரசாத் (முதுகலைத் தமிழாசிரியர்)

மோ. கிருபா சங்கர் (முதுகலை ஆங்கில ஆசிரியர்)

ஜி. சிவராம கிருஷ்ணன் (முது கலை உயிரியல் ஆசிரியர்)

இவர்கள் நால்வரும் பயிற்சியின் முடிவில் நடைபெற்ற மதிப்பீட்டில் மிகச்சிறப்பான முறையில் ‘A’ தரம் (Grade A) பெற்றுள்ளனர்.

குவியும் பாராட்டுக்கள்:

பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்ற முதல்வர் மற்றும் ஆசிரியர்களைப் பள்ளித் தாளாளர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார். மேலும், பள்ளியின் சக ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் அனைவரும் இவர்களின் இந்த முயற்சிக்கும் சாதனைக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கான பயன்கள்:

அய்அய்டி மெட்ராஸ் வழங்கிய இந்த உயர்தரப் பயிற்சியின் மூலம், பள்ளியிலேயே மாணவர்களுக்குத் தொழில்முறை வழிகாட்டுதல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இது மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் உள்ள பல்வேறு கல்வி வாய்ப்புகளைத் துல்லியமாகத் தேர்ந்தெடுக்கப் பெரிதும் உதவும் எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *