அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு (16.3.2026) பெரியார் மணியம்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) சார்பில் அன்னை மணியம்மையாரின் சிலைக்கும் மற்றும் படத்திற்கும் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர்
ஆர்.மல்லிகா, பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா தலைமையில் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
