சென்னையில் கனமழை காரணமாக கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தேங்கிய மழைநீரை பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒப்புதலின்றி வெளியேற்றினர். இதனால் வேளச்சேரி அய்ந்து பர்லாங் சாலையில் தேங்கிய மழைநீரை போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டதை பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமை செயலாளர் – ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று (4.11.2023) அதிகாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.