நயினார்பாளையம், மார்ச் 17- கல்லக்குறிச்சி மாவட்ட கழகம், ப.க சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா 10, 11, 03.26 செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களும் கழக பேச்சாளர் இராம.அன்பழகனை அழைத்து முதல் நாள் மாலை 5:30 முதல் 6:15 வரை நயினார் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றிய கழகத் தலைவர் க.அசன் தலைமையில் கழக தோழர் ஆ.நாகராஜ் வரவேற்புரையில் கழக தோழர் மதியழகன் நன்றி கூறவும் அதனை தொடர்ந்து இரவு 7:30மணி முதல் 8:30 வரையிலும் உலகியநல்லூர் கிராமத்தில் ஒன்றிய கழக செயலாளர் த.ராஜேந்திரன் தலைமையிலும் தெருமுனைக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
கலந்துகொண்டோர்
பூங்கொடி கருணாகரன் ஊராட்சி மன்ற தலைவர், ராஜேந்திரன் தி.மு.க (ஒ.கி.செ), துரைசாமி (மு.ஊ.க), ராஜாங்கம் தி.மு.க கிளை செயலாளர், வெங்கடேசன் தி.மு.க (கி.செ), பச்சையப்பன்(கி.த)தி.மு.க, கண்ணன், நாகம்மாள் நடராசன், ஜெயராமன், செந்தில், ராமலிங்கம், சக்திவேல், செல்வராஜ், ஆதிலட்சுமி, சிதம்பரம், முத்து, தனபால், பிரபாகரன், சரண்ராஜ், மாயக்கண்ணன், இளங்கோவன், இளவரசன் மற்றும் தி.மு.க, வி.சி.க, கம்னியூஸ்ட் மற்றும் ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அனைவரும் கூட்டத்தை கேட்டு தெளிவு பெற்றனர்.
மாத்தூர்
இரண்டாவது நாள் மாலை 5:45முதல் 6:30வரை மாத்தூர் கிராமத்தில் கழகத் தலைவர் துரைராஜ் தலைமையிலும் கழகத் தோழர் கோவிந்தராஜ் வரவேற்பிலும் கழக பேச்சாளர் இராம அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
எடுத்தவாய்நத்தம்
அதனை தொடர்ந்து மாலை 7:00மணிமுதல் இரவு 9:00 மணிவரை எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் மாவட்ட ப.க செயலாளர் வீர.முரு கேசன் தலைமையிலும் மாவட்ட ப.க அமைப்பாளர் சி.முருகன் வரவேற்றும் மாவட்ட கழகத் தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட கழகச் செயலாளர் ச.சுந்தரராசன், மாவட்ட ப.க தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட கழக மகளிரணி தலைவர் பழனியம்மாள் கூத்தன், மாவட்ட கழக மகளிரணி செயலாளர் எ.புகழேந்தி, மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர் பெ.சயராமன், மாவட்ட கழக துணைத் தலைவர் குழ.செல்வராசு, கோ.ஆறுமுகம், கூ.தமிழரசன், முன்னிலையிலும் கழக பேச்சாளர் இராம.அன்பழகன் கடவுளர் கதைகள் பற்றியும் அன்னை மணியம்மையார் அவர்களின் சிறப்புகள் பற்றியும் 2026 சட்ட மன்ற தேர்தலும் நமது கடமையும் பற்றியும் சிறப்புரையாற்றினார்.
கலந்து கொண்ட தோழர்கள்
க.நடராசன் தி.மு.க செயற்குழு உறுப்பினர், சுதா வரதராசன் ஊராட்சிமன்ற தலைவர், சி.என்.ஆர்.மாதவன் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர், மு.பொன்னுசாமி தி.மு.க, சின்னாப்பிள்ளை ப.க, செ.செல்வராசு ப.க, அ.ச.துரைராஜ் மாத்தூர் கழகத் தலைவர், கூ.தமிழரசன், இரா.பாண்டியன், மற்றும் ஊர் பொது மக்களும் கழக தோழர்களும் கலந்துகொண்டனர்.
தெருமுனைப் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு எடுத்தவாய்நத்தம் கழகத் தோழர் பெ.பெரியார்செல்வம் நன்றி கூறினார்.
கழக பேச்சாளர் இராம.அன்பழகனுக்கு மாவட்ட கழக, ப.க சார்பில் மாவட்ட கழகத் தலைவர் கோ.சா.பாஸ்கனுக்கு மாநில கழக மருத்துவரணி செயலாளர் மருத்துவர் கோ.சா.குமாரும் சால்வை அணிவித்தும் நாட்க்குறிப்பு வழங்கியும் சிறப்பு செய்தார்கள்.
