5 மாநில தேர்தல்: அய்ந்து நாடுகளின் மக்கள்தொகைக்கு இணையாக வாக்காளர்கள் எண்ணிக்கை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரலில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநில பேரவை களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒரே கட்டமாக 23.4.2026இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப். 23, 29-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் மே 4-இல் வெளியாகின்றன.

இந்நிலையில், மேற் கண்ட 5 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய தகுதிவாய்ந்த ஒட்டுமொத்த வாக்காளர் கள் எண்ணிக்கையானது ஒப்பீட்டளவில் சுமார் 5 நாடுகளில் உள்ள மொத்த மக்கள்தொகைக்கு இணையான அளவில் இருப்பது சுவாரசிய தகவலாக உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்

புதுச்சேரியில் மொத்தம் 9.44 லட்சம்

மேற்கு வங்கத்தில் மொத்தம் 6.44 கோடி

கேரளத்தில் மொத்தம் 2.70 கோடி

அசாமில் மொத்தம் 2.50 கோடி என ஒட்டு மொத்தமாக 17.4 கோடி வாக்காளர்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய காத்திருக்கின்றனர்.

தேர்தல் ஆணைய தகவலின்படி, மேற்கண்ட 5 மாநில ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண் ணிக்கை, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள்தொகைக்கு இணையாக உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *