வடக்குத்து, மார்ச் 17- வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் அன்னை மணியம்மையார் நினைவு போற்றும் நிகழ்வும் உலக மகளிர் நாள் விழாவும் மாவட்ட மகளிர் அணித் தலைவர் முனியம்மாள் தலைமையில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை நிர்வாகிகள் குணசுந்தரி தமிழேந்தி சத்தியவதி ஆகியோர் முன்னிலையில்15.3.2026 அன்று நடைபெற்றது.
வடக்குத்து மகளிர் அணித் தலைவர் விஜயா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் பங்கேற்ற மகளிர் அணி கிளைக் கழக பொறுப் பாளர்கள் வடலூர் கலைச்செல்வி, மருவாய் கலைச்செல்வி, வேகாக் கொல்லை மங்கலட்சுமி, அப்பியம் பேட்டை மலர், வேகாக் கொல்லை தமிழ்மணி, வடலூர் செல்வராணி, அப்பியம்பேட்டை தேவிகா, வடக் குத்து கீதா ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
கடலூர் மாவட்ட தமிழ் சங்க தலைவர் பேராசிரியர் குழந்தை வேலன் தொடக்க உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உலக மகளிர் நாள் வரலாறு மற்றும் நோக்கம் குறித்தும் அன்னை மணியம்மையாரின் தொண்டறம் பற்றியும் சிறப்புரை ஆற்றினார். பேராசிரியர் சுசீத்ரா பெண்கள் முன்னேற்றம் மற்றும் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் தொண்டறம் குறித்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட துணைத்தலைவர் மணிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், குறிஞ்சிப்பாடி கழகத் தலைவர் கனகராசு, நெய்வேலி பாவேந்தர் விரும்பி, வடக்குத்து கிளைக் கழக தலைவர் பாஸ்கர், செயலாளர் கண்ணன், வடலூர் கழக செயலாளர் குணசேகரன், அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடலூர் நகர அமைப்பாளர் முருகன், மருவாய் சேகர் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். முடிவில் திராவிட மணி நன்றி கூறினார்.
