திருவண்ணாமலை, மார்ச் 16- நேற்று (15.3.2026) காலை 10.30 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
மாவட்டக் கழகத் தலைவர் சி.மூர்த்தி அனை வரையும் வரவேற்றார். சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார்.
விழாவில் மாவட்டக் காப்பாளர் பி.பட்டாபிராமன், பொதுக்குழு உறுப்பினர் கு.பஞ்சாட்சரம், மாவட்ட துணைத் தலைவர் கு.இராமன், மாவட்ட துணைச் செயலாளர் க.சங்கர், ப.வெங்ட்ராமன், ப.அறிவுக்கரசு, இரா.திருமலை, சு.ஏழுமலை, வேட்டவலம் கோ.தேவராசு, எம்.சபரி, மு.இரங்கநாதன், ப.பழனி, உண்ணாமலை, முனு.ஜானகிராமன், த.சுந்தரமூர்த்தி, பேராசிரி யர் வெற்றி சங்கமித்திரா (தம்மம் பேரவை), ப.கார்த்திக் வேல்மாறன் (திமுக), நேரு (திமுக), சீவி.கார்த்திகேயன் (மதிமுக), இரா.திருமலை (சிபிஅய்), வே.முத்தையன் (சிபிஅய்), நியூட்டன் (விசிக), கிச்சா, பசுமைச்செல்வன், வெற்றி செல்வன், தமிழ்செல்வன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட கழகச் செயலாளர் ப.அண்ணா தாசன் நன்றி கூறினார்.
