சென்னை, மார்ச் 17 திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: உழைப்பை அள்ளிக்கொடுங்கள், உதயசூரியன் உதிக்கட்டும். வீடுதோறும் திராவிட மாடலின் சாதனைகள் சென்றடைந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள். அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டை காக்கும் கொள்கை உறுதி, துணிச்சல்.
இதுதான் தி.மு.க.. ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் ஓட்டுக்களை உதயசூரியன் சின்னத்திலும், நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம். திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை. இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியாவில் மதச் சுதந்திரம் நலிவடைந்து வருவதாக அமெரிக்கா அறிக்கை
புதுடில்லி, மார்ச் 17 இந்தியாவில் மத சுதந்திரம் நலிவடைந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் பன்னாட்டு மதச் சுதந்திரம் தொடா்பான ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளதை நிராகரித்து ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் பன்னாட்டு மதச் சுதந்திரம் தொடா்பான ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பன்னாட்டு மதச் சுதந்திரம் மீதான அமெரிக்க ஆணையத்தின் (யூ.எஸ்.சி.அய்.ஆர்.எஃப்.) அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்ந்து நலிவடைந்து வருவதாகவும் இந்திய அரசு மதச் சிறுபான்மையினரைக் குறிவைப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
