தமிழில் 2025-ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான சாகித்ய அகாடமி விருது முற்போக்குச் சிந்தனையாளரும், செயல்பாட்டாளரும், எழுத்தாள ருமான ச.தமிழ்ச் செல்வன் அவர் களுக்கு “தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்” நூலுக்காக அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்பே எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 24 பேருக்கு அறிவிக்கப்பட இருந்த சூழலில், சாகித்ய அகாடமி விருதுகளில் ஒன்றிய அரசின் அவசியமற்ற தலையீட்டால் காலதாமதாகி, கடும் எதிர்ப்பை இந்தியா முழுவதும் சந்தித்தது. என்றாலும் மாற்றம் இன்றி இப்போதேனும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியே!
கலை, இலக்கியத் துறைகளில் பாசிசப் போக்குகள் இல்லாமல் பாரபட்சமற்ற நிலை தொடர வேண்டும்.
கருத்துரிமைக்காகவும், சமூகநீதி – சமத்துவத்துக்காகவும் தொடர்ந்து களத்தில் நிற்கும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நமது கொள்கைப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
17.03.2026
சென்னை
