தமிழ்நாடு மின் வாரியப் பணியாளர்களுக்கு ஆறு விழுக்காடு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 16– தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு டிச.1ஆம் தேதி முதல் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து ஏற்படுத்தப்பட்ட குழுவினருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் இதர சங்க நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இறுதியாக ஊழியர்களுக்கு, 2023ஆம் ஆண்டு டிச.1ஆம் தேதி பெறும் ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வும், அதே நாளில் 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு பணிப் பலனாக, அந்த நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.

மேலும் 2023ஆம் ஆண்டு டிச.1ஆம் தேதி 10 ஆண்டுகள் பணி முடித்த அலுவலர்களுக்கு, அந்த நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் பணிப் பலனாக வழங்குவது எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும், அலுவலர்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை சிறப்புப்படி வழங்கவும் ஆணையிடப்படுகிறது.

சுமுக முடிவு எட்டப்பட்டது: இந்த அறிவிப்பை தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அலுவலர் சங்கம் நிர்வாகிகள் ஆகியோர் 13.3.2026 அன்று தமிழ்நாடு மின்வாரிய தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது.

இவ்வூதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 2023ஆம் ஆண்டு டிச.1ஆம் தேதி முதல் கருத்தியலாகக் கணக்கிட்டு, 2025ஆம் ஆண்டு டிச.1 முதல் பணப் பலன்கள் வழங்கவும். இடைப்பட்ட காலத்துக்கு 2023ஆம் ஆண்டு டிச.1ஆம் தேதி முதல் 2025ஆம் ஆண்டு நவ.30 வரை கருணைத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.500/- வீதம் கணக்கிட்டு 24 மாதங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டு டிச.1 முதல் இந்த ஆண்டு பிப்.28ஆம் தேதி வரை வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை ஒரே தவணையாக வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *