“வெளியுறவுக் கொள்கையில் படுதோல்வி” ஒன்றிய பிஜேபி அரசுபற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் திறமையின் மையால் நாடு முழுவதும் கடுமையான சமையல் எரிவாயு (சிலிண்டர்) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகக் கடுமையான விமர் சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒன்றிய அரசை ஒரு “Failure Model” (தோல்வியடைந்த மாதிரி) என்று சாடியுள்ளார். தொலைநோக்குப் பார்வையும் இல்லை, வரவிருக்கும் சவால்களைச் சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை என ஒன்றியஅரசை அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து தனது பதிவில், ஒன்றிய அரசின் இத்தகைய தவறான முடிவுகளால் சாமானிய பொதுமக்கள்தான் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர் என்றும், இது மக்களுக்குத் தரப்படும் தேவையற்ற தொல்லை என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் இல்லத்தரசிகள் முதல் சிறு வணிகர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சீராக்கப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியு றுத்தியுள்ளார். இந்த அதிரடிப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *