இதுதான் கடவுள் சக்தியா? நெஞ்சம் பொறுக்குதில்லையே தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிகச் சுற்றுலா விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப உயிரிழப்பு!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காட்மண்ட்,  மார்ச் 16 பொள்ளாச்சி மற்றும் தேவ கோட்டை பகுதிகளில் இருந்து நேபாளத்துக்கு குடும்பத்துடன் ஆன்மிகச் சுற்றுலா சென்ற 7 பேர் அண்மையில் (14.3.2026) அங்கு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர தமி ழ்நாடு அரசு சார்பில் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மாக்கினாம்பட்டி, மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (55). இவர் பொள்ளாச்சியில் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மீனா (48). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முத்துக்குமார் மற்றும் மீனா, பொள்ளாச்சி சிடிசி காலனியைச் சேர்ந்த பாபு, அவரது மனைவி தமிழரசி (65) ஆகியோர் கடந்த 7-ஆம் தேதி நேபாளத்துக்கு 13 நாட் களுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனர்.

இதேபோன்று தேவகோட் டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் அண்ணாமலை (60), அவரது மனைவி விஜயாள் (56), சகோதரி மீனாட்சி (61) உள்ளிட்டோரும் இவர்களுடன் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு புறப் பட்டனர். இவ்வாறு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் 25-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு குழுவாக சென்னையில் இருந்து ‘கங்கா காவேரி ரயில்’ மூலம் பிரயாக்ராஜ் சென்றனர். அங்கு சாமி வழிபாடு செய்த பின்னர் திரிவேணி சங்கமம், அயோத்தி, முக்திநாத் உள்ளிட்ட இடங்களுக் குச் சென்று வழிபாடு செய்தனர்.

பின்னர் நேபாளம் கண்டகி மாகாணத்தில் உள்ள மனக்க மனா கோயிலுக்கு 14 பேர் கொண்ட ஒரு குழுவினர் ஒரு வேனிலும், 9 பேர் கொண்ட ஒரு குழுவினர் மற்றொரு வேனிலும் சென்று வழிபாடு செய்துவிட்டு நேற்று  (14.3.2026) முன்தினம் இரவு தங்குமிடத்துக்கு திரும்பிக்கொண்டி ருந்தனர். சாஹித் லாகான் கிரா மத்தில் வந்தபோது 14 பேர் பயணம் செய்த வேன் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையை விட்டு விலகி 150 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது.

இதில் முத்துக்குமார். அவரது மனைவி மீனா மற்றும் தமிழரசி ஆகியோரும் தேவகோட்டை அண்ணாமலை, அவரது மனைவி விஜயாள், சகோதரி மீனாட்சிமற்றும் ஒருவர் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொள்ளாச்சி அன்சாரி வீதியைச் சேர்ந்த மீனாட்சி உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள சித்வான் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டுவர ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர் கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், நேபாளத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு கொண்டு வர தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மிகச் சுற்றுலா சென்று விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *