சென்னை, மார்ச் 16 கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நான் முதல்வன்’ – சுப்பிர மணிய பாரதியைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். கடந்த 5 ஆண்டு களில் 1.55 லட்சம் அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம். ஒட்டு மொத்தமாக 52,81,495 வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம்.
நான் முதல்வன் திட்டத்தில் உதவிபெற்று 145 மாணவர்கள் யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்குச் சிறந்த சான்றுதான், 22 வயதில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று இந்திய அளவில் இளமையிலேயே கவனம் பெற்றுள்ள நம் சுப்பிரமணிய பாரதி.
இதுதான் நான் காண விரும்பும் தமிழ்நாடு. வளமான இளைய தமிழ் நாடு. நமது ‘திராவிட மாடல்’ அரசு கல்வியில் செய்து வரும் முதலீடுகளின் முழுவீச்சு அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத்தின் நல்மாற்றத்தில் எதிரொ லிக்கும். வெற்றிக் கதைகள் மேலும் உயரும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
