ஆன்மிகம் பண்பாட்டைப் பாதுகாக்கிறதா? பாழாக்குகிறதா? -மஞ்சை வசந்தன்

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆன்மிகத்தை ஆதரித்துப் பேசுகின்றவர்கள், “கடவுள், விதி, பிறவி, பாவ புண்ணிய நம்பிக்கைகள், சொர்க்கம், நரகம், பக்தி போன்றவை உண்மையல்லாமல் போனாலும் அவை அறத்தை வளர்க்கின்றன, ஒழுக்கத்தைக் காக்கின்றன, நேர்மையை நிலைநாட்டுகின்றன, இறையச்சத்தில் தப்புகள் நிகழாமல் செய்கின்றன, கருணையை வளர்க்கின்றன” என்றும், “ஆன்மிகம் பண்பாட்டைக் காக்கிறது, வளர்க்கிறது, நிலைநிறுத்துகிறது” என்றும் வாதிடுகின்றனர்”. “ஆன்மிகம் அறத்தை வளர்ப்பதில்லை, ஆக்கத்தைக் காத்து அழிவையே உருவாக்குகிறது” என்ற உண்மைகளை இதற்கு முன் விரிவாகப் பார்த்தோம். அந்த வரிசையில் ஆன்மிகம் பண்பாட்டை வளர்க்கிறதா? பாழாக்குகிறதா? என்பதை இனி விளக்கமாய்க் காண்போம்.

கட்டுரை

பண்பாடு என்பது என்ன?

செம்மையில்லாமல், ஒழுங்கு, கட்டுப்பாடு இல்லாமல், நேர்மை, நீதி, வாய்மை இல்லாமல் இருக்கும் சமுதாயத்தைப் பண்படுத்துவதே பண்பாடு ஆகும். இயற்கையில் நிலம் கரடுமுரடாய், மேடுபள்ளமாய், கல்லும் முள்ளுமாய், புதரும் புல்லுமாய் இருக்கும். அதை நம் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதை சீர் செய்து பண்படுத்துவார்கள். அப்படி இயல்பாய் பண்பாடற்று இருக்கும் சமுதாயத்தைச் சீர் செய்து பண்படுத்துவதே பண்பாடு ஆகும். அப்படிப்பட்ட பண்படுத்தும் பணியை ஆன்மிகம் செய்கிறதா? அல்லது பண்பாட்டைச் சீரழிக்கிறதா? என்பதை ஆராய்வோம்.

கருவறையில் காமக்களியாட்டம்

கடவுளும் பக்தியும் பண்பாட்டை வளர்க்கிறதென்ற வாதம் பச்சைப் பொய் என்பது அக்காலத்திலிருந்து இக்காலம் வரை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கலைஞர் பராசக்தி படத்திலே கருவறையில் காமக் கொடுஞ்செய்லகள் நடைபெறுவதை எடுத்துக் காட்டி விழிப்பூட்டினார். கடவுளைக் கும்பிட வந்த பெண்ணைக் காம இச்சையுடன் கட்டிபிடித்து வல்லுறவு செய்ய முயன்ற பூசாரியை மக்கள் முன் நிறுத்தினார்!

அது கற்பனைக் கதையாயினும் நாட்டு நடப்பையே அவர் படம் பிடித்துக் காட்டி யிருந்தார். அதற்கான தற்கால நடைமுறைதான் காஞ்சி கோயில் கருவறையில் தேவநாதன் என்ற அர்ச்சகர் கருவறையிலே ஒரு பெண்மணியுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டது.

இவ்வளவு நடந்த பின்னும் பக்தி பண்பாட்டை வளர்க்கிறது என்று பச்சையாய் பொய் பேசுவது அயோக்கியத்தனமல்லவா?

ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியின் சங்கர மடத்துக் காம களியாட்டங்கள் சந்தி சிரித்ததை உலகமே பார்த்தது.

கட்டுரை

நாடு தழுவிய அளவில் ஒவ்வொரு நாளும் சாமியார்கள் பக்தியின் பெயரால் நடத்தும் காமக்களியாட்டங்கள் எண்ணிலடங்காதவை. இளம் பெண்களுடன் தனிமையில் பூஜை செய்கிறேன் என்று அப்பெண்களை வன்புணர்வு செய்து, கருவுறச் செய்கின்ற அவலம் தொடர்ந்து நடைபெறுகிறது. அறியாமையில் உழலும், பெற்றோரும், கணவனும் சாமியார்களிடம் பெண்களை அனுப்புவது எவ்வளவு பெரிய மடமை! ஆன்மிகம் பண்பாட்டை வளர்க்கும் லட்சணம் இதுதானா?

கோயில்கள் கொலைக் கூடாரம்!

சிதம்பரம் கோயிலுக்குள் அப்பர் என்ற திருநாவுக்கரசரைக் கொன்றது; நந்தனைத் தீயிலிட்டு எரித்துக் கொன்றது என்ற இரண்டு கொடுங்கொலைகளும் நடந்துள்ளன. கொலைகளை நடத்திய கொடுங்கூட்டம் அப்பரும், நந்தனாரும் கடவுளோடு கலந்துவிட்டார்கள் என்று கதை கட்டி மக்களை ஏமாற்றிய மோசடியும் நடத்தப்பட்டது. சிதம்பரம் கோயிலைப் போன்றே நாட்டில் பல கோயில்களில் கொலைகள் நடந்துள்ளன.

கட்டுரை

20 ஆண்டுக்ளுக்கு முன்னால் காஞ்சியில் சங்கரராமன் என்பவர் கோயிலிலே கொலை செய்யப்பட்ட கொடுஞ்செயல் நடந்துள்ளது. இதில் ஜெயேந்திர சங்கராச்சாரியே முதன்மைக் குற்றவாளி என்று வழக்கு நடந்தது.

பணமும், செல்வாக்கும் இருந்தால் கொலைக் குற்றவாளிகள் கூட விடுதலையாகி விடும் கொடுமையும் நடக்கின்றன. மக்களைக் காப்பாற்றுகிறார் கடவுள் என்பது எவ்வளவு பெரிய பொய், மோசடி என்பதை இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. கருவறையில் வல்லுறவு, கருவறையிலே கொலை, கருவறையிலே திருட்டு, கொள்ளை. ஆனால் கடவுள் எதையும் கண்டுகொள்ளாது! இது என்ன ஆன்மிகம்? கடவுள் சிலையையே கடத்திக் கொண்டு போகிறார்கள். அப்போதும் கடவுள் “கம்”மென்றே இருக்கிறது! இதுதான் சக்திவாய்ந்த கடவுளாம்! அதுவன்றி ஓர் அணுவும் அசையாதாம்! எல்லா கொடுமைகளையும் நடத்தும் ஆன்மிகம் பண்பாட்டை அழிக்குமா? காக்குமா? சிந்தியுங்கள்!

பாசத்தையே கொன்றொழிக்கும் பக்தி!

பண்பாடு என்பது சமூக உறவுகள் பின்னிப் பிணைய, நிலைக்க, பேணப்பட வேண்டிய முக்கியமான ஒன்று. சில உன்னத பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் தான் மக்கள் வாழ்வு பாதுகாப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட பண்பாட்டையே கொன்றொழிக்கும் படுபாதகச் செயலைப் பக்தி செய்கிறது.

கட்டுரை

பெற்றோர் பிள்ளைப் பாசம், கணவன் மனைவி உறவு போன்றவை இவற்றுள் முதன்மையானவை.

பத்து மாதம் சுமந்து பாசத்தோடு பெற்றெடுத்த பிள்ளை பள்ளிக்குச் சென்றிருக்கிறான். அப்போது, அவ்வீட்டிற்கு ஒரு சிவனடியார் வருகிறார். சிறுத்தொண்டரும் அவர் மனைவியும் அவருக்கு உணவு கொடுக்க முற்படுகின்றனர். அப்போது அந்த சிவனடியார் “எனக்கு உங்கள் பிள்ளையை அறுத்துக் கறி சமைத்துப் போட வேண்டும்” என்கிறார். பதறிப்போன பெற்றோர் தவிக்கின்றனர்.

“காலம் தாழ்த்தக் கூடாது, உடனே சமைக்க வேண்டும். தாய், தந்தையாகிய நீங்கள் இருவருமே உங்கள் பிள்ளையை அறுத்துக் கறி சமைக்க வேண்டும்” என்று கட்டளையிட, பிள்ளையைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்து, தாய் இறுக்கிப் பிடிக்க, தந்தை அக்குழந்தையை அறுத்து சமைத்து சாமியாருக்குச் சாப்பாடு போட்டார்கள் என்கிறது பக்தி வரலாறு.

ஒரு குழந்தையின் பாதுகாப்புக்கு முதன்மை யான நம்பிக்கை தாயும் தந்தையும். இதுவே பண்பாட்டின் உச்ச நிலை. அப்படிப்பட்ட உயர் பண்பாட்டையே பக்தி சிதைத்துப் பாழாக்கி விட்டது. இதுதான் ஆன்மிகம் பண்பாட்டை வளர்க்கும் யோக்கியதையா?

கணவன் மனைவி உறவு உன்னதமான பண்பாடு. வாழ்க்கையில் இன்ப துன்பங்களில் சம பங்கு ஏற்கும் கூட்டு வாழ்க்கையின் மாண்பு. இவ்வாழ்வின் அடிப்படை கணவன் மனைவி என்ற பாசப் பிணைப்பின் உன்னதத்திலே தான் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட சிறப்புக்குரிய கணவன் மனைவி பிணைப்பு என்னும் பண்பாட்டைப் பக்தி சிதைத்துச் சிதறிவிட்டதற்கு இயற்பகை நாயனாரின் செயலே சான்று.

சிறந்த சிவபக்தனான இயற்பகை நாயனாரிடம் ஒரு சாமியார் வருகிறார். அவர் இயற்பகையைப் பார்த்து “உன் மனைவியை எனக்குக் கொடு” என்கிறார். இயற்பகை நாயனார் தன் மனைவியையே கொடுத்து விடுகிறார். இது பண்பாடா?

இவன் சம்மதித்தால் மட்டும் போதுமா? மனைவியின் சம்மதம் வேண்டாமா? மனைவி யின் சம்மதம் கேட்காமலே சாமியாருடன் மனைவியை அனுப்புகிறான்! இது பண்பாடா? பக்தியும் ஆன்மிகமும் பண்பாட்டை வளர்க்கிறது என்று கூறுவது எவ்வளவு பெரிய மோசடி. நடைமுறை வாழ்வில் பக்திமானை விட, கடவுள் மறுப்பாளர்களே பண்பாட்டோடு வாழ்வதும், மனித மாண்போடு வாழ்வதும் உண்மையாகும்!

பெற்ற தாயையே உடலுறவுக் கொள்கிறான் மகன் (பார்ப்பான்). அத்தாயோடு புறப்பட்டுச் செல்கின்றான். இவளுக்கு கடவுள் மோசம் கொடுக்கிறார்? அது கடவுளா? இதுதான் ஆன்மிகத்தின் மாண்பா?

பரிகாரம், நேர்த்திக்கடன்

நான் உனக்கு இதைத் தருகிறேன், நீ எனக்கு அதைக் கொடு என்பது பண்பாட்டுக்கு (நாணயத்திற்கு, நேர்மைக்கு உண்மைக்கு) எதிரான செயல். “பாலுந் தெளிதேனும் பாழும் பருப்பும் நான் தருகிறேன், எனக்கு நீ மூன்றுத் தமிழைத் தா” என்று விநாயகரிடம் பேரம் பேசும் ஆன்மிகம் பண்பாடானதா?

மூன்று தமிழ் விநாயகர் கொடுத்து வரக்கூடியதா? அது கற்றுத் தேர்ந்து வரக்கூடியதாயிற்றே! பாலும் தேனும் கொடுத்தால் முத்தமிழும் வரும் என்றால், பள்ளிக்கூடம் எதற்கு? ஆசிரியர்கள் எதற்கு?

கட்டுரை

கடவுள் ஒன்றைப் பெற்றுக் கொண்டு, பக்தனுக்குப் பிரிதொன்றைத் தருவார் என்றால் அது வணிகம் அல்லவா? கடவுளிடம் பேரம் பேசுவது பண்பாடா? அது கடவுளைக் கொச்சைப்படுத்தும் செயல் அல்லவா?

அதேபோல் “நான் மொட்டை போடுகிறேன், உனக்கு வேல் வாங்கி சார்த்துகிறேன், தீ மிதிக்கிறேன், அலகு குத்திக் கொள்கிறேன் எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு” என்று வேண்டிக் கொள்வது பண்பாடா? அவர்கள் சொல்கிறபடியே விருப்பு, வெறுப்பு அற்ற, வேண்டுதல், வேண்டாமை இல்லாத ‘கடவுளை’ இது இழிவுபடுத்தும் செயல் அல்லவா?

வர்ணபேதம்
பண்பாட்டிற்கு உகந்ததா?

மனித சமுதாயத்தில் சமத்துவம், சம உரிமை, சம வாய்ப்பு ஆகியன முதன்மையான கோட்பாடு – பண்பாடு. அப்படியிருக்க மனிதனைப் படைக்கும் போதே ‘பிராமணனாக’, சத்திரியனாக, வைசியனாகக் கடவுள் படைத்தது என்று கூறி அதற்குச் சாஸ்திரங்கள் எழுதி, தான் மட்டும் உயர்ந்தவன் எங்களுக்கே எல்லா உரிமைகளும், உடமைகளும் என்று கூறி, சூத்திரர்கள் அடிமை வேலை செய்ய வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள் என்று சொல்லி மனிதர்களைப் பேதப்படுத்துவது பண்பாடா? பண்பட்ட சமுதாயத்தில் ஆதிக்கமும், அடிமைத்தனமும், உயர்வும், தாழ்வும், உரிமை மறுப்பும், மான இழப்பும் இருக்க முடியுமா?

அப்படியிருக்க மனிதர்களை ஏற்றத்தாழ்வாகக் கடவுளே படைத்தார் என்று கூறுவதும், நடத்துவதும் பண்பட்ட செயலா? அதை அனுமதிக்கும் ஆன்மிகமும் பண்பாட்டை வளர்க்குமா? தகர்க்குமா? சிந்தித்துப் பாருங்கள்!

கட்டுரை

தமிழைத் தீட்டுள்ள மொழி
என்பது பண்பட்ட செயலா?

‘ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களே கடவுள் சிலைகளைத் தொட முடியும், பூஜை செய்ய முடியும்’, ‘சமஸ்கிருதம் மட்டுமே பூஜைக்குரிய மொழி, தமிழ் நீச பாஷை,  தீட்டுள்ளது’ என்பது அயோக்கியத்தனம் அல்லவா? இவ்வளவு காலம் கடவுளும் இதை அனுமதிக்கிறது என்றால் அது பண்பட்ட கடவுளா? அப்படிப்பட்ட ஆன்மிகம் பண்பாட்டை வளர்க்க முடியுமா?

இக்காலத்திலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூறித் தடை செய்வது பண்பட்ட செயலா? மனிதர்களில் பெரும்பான்மை மக்களை, உழைக்கும் மக்களை இப்படி ஒதுக்கி இழிவு செய்வது பண்பாட்டின் அடையாளமா?

காசு கொடுத்தால் கடவுளைக் காண
முன்னுரிமை பண்பாடாகுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட பல கோயில்களிலும் “கட்டண தரிசனம்” “சிறப்புத் தரிசனக் கட்டணம்” என்று காசு பெற்றுக் கொண்டு வசதி படைத்தவர்களைக் காத்திருக்காமல் கடவுளைத் தரிசிக்க அனுப்புவதும், கடைக்கோடி மக்களை “இலவச தரிசனம்” என்று நாள் கணக்கில் காக்க வைப்பது நேர்மையா? பண்பட்டச் செயலா?

மனிதன் தன் மனவேதனைக்கு ஒரு வடிகாலாக, தன் அறியாமையினால் கடவுளை நாடிச் செல்லும் போது அங்கு தட்சிணை வசூலிப்பது சரியா? காசு கொடுத்தால் முன்னுரிமை என்பது கடவுளுக்கு ஏற்புடையதா?

இப்படிப்பட்ட நடைமுறைகளை கடவுள் என்று ஒன்று இருந்தால் அனுமதிக்குமா? ஆனால், கடவுள் பெயரால் இத்தனையும் நடக்கிறது என்றால் ஆன்மிகம் என்பது ஆதிக்கவாதிகளின், ஏமாற்றுப் பேர்வழிகளின், சுரண்டுகின்றவர்களின் கருவி என்பது உறுதியாகிறது அல்லவா? அப்படியிருக்க இப்படிப்பட்ட ஆன்மிகம் மனிதநேயத்தை, மாண்பை, பண்பாட்டை எப்படி வளர்க்கப் பயன்பட முடியும்? சிந்திக்க வேண்டாமா?

திருப்பதி லட்டில் மோசடி

பக்தன் கடவுளின் “பிரசாதமாக”ப் பக்தியோடு வாங்கியுண்ணும் லட்டில், நெய்க்குப் பதிலாக டால்டாவை ஊற்றித் தயாரிக்கிறார்கள். அதை ஏழுமலையான் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்றால் இப்படிப்பட்ட ஆன்மிகம் பண்பாட்டை எப்படி வளர்க்கும்?

பக்தியை சற்று ஒதுக்கிவிட்டு சிந்தித்துப் பாருங்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *