ரூ.225 விலையில் விரைவில் கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி

Viduthalai
1 Min Read

சீரம் இன்ஸ்டிடியூட்டின் தயாரிப்பான கோவோவாக்ஸ் கரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த கோவின் வலைதளத்தில் விரைவில் சேர்க்கப்பட உள்ளது.

கோவோவாக்ஸ் ஒரு டோஸின் விலை ரூ.225 ஆக (ஜிஎஸ்டி தனி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவின் வலைதளம் மூலமாக இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். கோவோவாக்ஸ் ஒரு உலகத் தரம்வாய்ந்த தடுப்பூசி. இதற்கு டிஜிசிஅய், டபிள்யூஅய்ஓ, யுஎஸ்எப்டிஏ ஆகிய அமைப்புகள் அங்கீகாரம் அளித்துள்ளன. எனவே, கரோனா அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் பெரிய வர்களுக்கு பூஸ்டர் டோஸாக இந்த தடுப்பூசியை கோவின் வலைதளத்தில் சேர்க்க வேண்டும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்அய்அய்) இயக்குநர் பிரகாஷ் குமார் சிங், ஒன்றிய சுகாதார துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். இதனை ஏற்று சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த முடிவினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *