அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 16- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (16.3.2026) காலை, அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழவைத்த தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2026) காலை 10.30 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாக சென்று மலர் மாலை அணிவிக் கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தந்தை பெரியார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுத் தூண் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைக்கப்பட்டது. பின்னர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது

அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளரணி, பெரியார் மருத்துவமனை, திராவிடன் நிதி, பெரியார் நூலகர் வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பங்கேற்றோர்

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், நெய்வேலி ஞானசேகரன், மருத்துவர் டாக்டர் தர்ஷினி ஆனந்து, சி.வெற்றிச்செல்வி, பேராசிரியர் க.பெரியார் செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி தங்க.தனலட்சுமி, பசும்பொன் செந்தில்குமாரி, இளவரசி, உமா, பூவை செல்வி, மு.செல்வி, வி.வளர்மதி, க.சுமதி, க.வெண்ணிலா, இளவேனில், பூங்குழலி, உத்ரா, வாணி, தேவி, விசாலாட்சி, வெண்ணிலா கதிரவன், க.அழகுமணி, வளர்மதி, மோகனப்பிரியா, பிரசீனா, அன்புமணி, மரகத மணி, ஆதிலட்சுமி, கலைவாணி, பெரியார் பிஞ்சு அதிரா.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், ஆயிரம் விளக்கு சேகர், காரைக்குடி பிராட்லா, மயிலாடுதுறை கி.தளபதிராஜ், வழக்குரைஞர் துரை அருண், தொழிலாளரணி செல்வராஜ், ஜனார்த்தனம், பெரியார் மாணாக்கன், சி.காமராஜ், எண்ணூர் மோகன், நங்கநல்லூர் தமிழினியன், கலைமணி, ஆனந்த், அசோக், டெய்சன், ராமு மற்றும் திரளான கழகத் தோழர்கள், பெரியார் திடல் பணித் தோழர்கள் அனைவரும் பங்கேற்று மரியாதை செலுத் தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *