கல்லடி – சொல்லடி – சிறைவாசம் எதுவரினும்
கலங்காது முழங்கிநின்ற வேங்கையொன்றுக் கண்டோம்!
பெரியாரெனும் பெருந்தீ – அணையாது காத்த
தாய்ப்புலியொன்றை பெருவியப்புடன் கண்டோம்!
இராவணன் உருவத்தைக் கொளுத்தி
தமிழினப் பகைவர் – ஸநாதன இனவெறியர்
தமிழரை இழிவுசெய்வதைக் கண்டு
மனிதநேயத் தீரத்துடன் – தன்மான எழுச்சியுடன்
இராமனையும் – பாசிச இனவெறியையும்
கொளுத்திய அறச்சீற்றதைக் கண்டோம்!
ஆணாதிக்கத்தின் ஏச்சுப் பேச்சுகளை குப்பையிலே
தூக்கியெறிந்து – களத்திலே சமுதாய விடுதலைக்காக
நின்ற பெண்ணியச் சுடரொளியைக் கண்டோம்!
டெல்லி ஏகாதிபத்தியத்தை ஒவ்வொரு நொடியும்
அலறவிட்ட அரிமாவைக் கண்டோம்!
எளிமையெனும் பண்புக்கு உருவகமாய் உருவெடுத்த
கருஞ்சேலை வேங்கையினைக் கண்டோம்!
ஸநாதன இருள்ஒழித்து – செம்பொதுமைப் புத்துலகு
படைக்கும் இலட்சியச் சுடரினைக் கண்டோம்!
நெருக்கடி நிலை நெருப்பாற்றிலே
டெல்லிக்கு சிம்ம
சொப்பனமாய் நின்ற
சிறைக்கஞ்சாத சிங்கத்தை –
வீரத்தின் விளைநிலத்தை
வியப்புடன் கண்டோமே!!
இத்துணையும் – இன்னும் பலவற்றினையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர்
தோழர் மணியம்மை யென்றுரைத்தோம்!
மனிதகுல விடுதலைக்குப் போராடும்
தோழர்கள் யாவருக்கும் அன்னை
எம் மணியம்மையார்…
வாழ்நாள் ஒவ்வொன்றிலும் – ஒவ்வொரு
நொடியிலும் – மணியம்மையாரே!
உம்மை இதயத்திலேந்துவோம்!!
அன்னையே – உங்கள் நினைவையும் –
வரலாற்றையும் என்றும் மறவோம்!
உங்கள் இலட்சியத்தை நிச்சயம் வென்றெடுப்போம்!
சமத்துவ உலகினைப் படைத்திடுவோம்!!
நிச்சயம் – நிச்சயம் – நிச்சயம்!!!
– த.யு.கதிரவன்
(பத்தாம் வகுப்பு)
