அரியலூர்: ‘தி.மு.க.வெல்லட்டும்’ தெருமுனைக் கூட்டம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரியலூர், மார்ச் 16  ‘திமுக வெல்லட்டும்; திராவிட மாடல் தொடரட்டும்’ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் அரி யலூர் அண்ணாசிலையருகில் சிறப்பாக நடைபெற்றது.  கடந்த 11.3.2026 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சி.சிவக்கொழுந்து தலைமையேற்க, ஒன்றியச் செயலாளர் த.செந்தில் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட விவசாய அணித் தலைவர் மா.சங்கர், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் வெ.இளவரசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் லெ. தமி ழரசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ.இளவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன்,  மாவட்டத் தலைவர் விடுதலை.நீலமேகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றிய பின்னர், கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார். ‘திராவிட மாடல்’ அரசு தொடர வேண்டியதன் அவசியத்தையும், திமுக அரசின் சாதனைகளையும், பா.ஜ.க. தமிழ்நாட்டை வஞ்சிப்பதை விளக்கியும் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.ஜி. மணிகண்டன் நன்றி கூறினார்.

ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் தியாக. முருகன், மாவட்ட துணை தலைவர் இரா.திலீபன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மறவனூர் மதியழகன், ஆட்டோ தர்மா, அரங்கநாடன், பாரி வள்ளல், விளாங்குடி சரத்குமார் விக்னேஷ்உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *