திருமானூர், மார்ச் 16 ‘‘திமுக வெல்லட்டும்; திராவிட மாடல் தொடரட்டும்’’ என்ற தலைப்பில் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது அந்த வரிசை யில், திருமானூர் கடைவீதியில் எழுச்சியோடு கடந்த 12.3.2026 அன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் க.சிற்றரசுதலைமையேற்க, ஒன்றியச் செயலாளர்பெ.கோபிநாதன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட விவசாய அணித் தலைவர் மா. சங்கர், மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர் வெ.இளவரசன், மாவட்ட இ.அ.செயலாளர் வி.ஜி.மணிகண்டன் மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ.இளவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் விடுதலை.நீலமேகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் கழகப் பேச்சாளர் மாங்காடு சுப.மணியரசன் சிறப்புரையாற்றினார். தொடக்ககாலம் முதல் இன்றுவரைதி.மு.க ஆட்சி எப்படி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளது என்பதையும்அ.தி.மு.கவின்இன்றைய நிலை எவ்வளவு பரிதாபமாக உள்ளது என்பதை விளக்கி யும் சிறப்புரையாற்றினார் .
திருமானூர் நகரத் தலைவர் சு. சேகர் நன்றி கூறினார் தி.மு.க மேனாள் மாவட்ட துணைச் செயலாளர் தனபால் கூட்டத்திற்கு பாராட்டுத் தெரிவித்து சிறப்பு சொற்பொழிவாளர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் தியாக. முருகன், செந்துறை ஒன்றிய தலைவர் முத்தமிழ்ச் செல்வன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் க.செந்தில் கீழப்பழுவூர் கே. எம் அன்பரசன் மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மறவனூர் மதியழகன், விளாங்குடி விக்னேஷ்உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
