
*பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 14.3.2026 அன்று நடைபெற்ற 46ஆவது ஆண்டு விழா, விடுதி விழாவில் ‘பி.டெக்ஸ் பாட் – 2026’ (P-Techspot – 2026) விழா மலரை நிறுவனத் தலைவர் கி. வீரமணி வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திட்ட இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சிவராஜா இராமநாதன், கல்லூரியின் மேனாள் மாணவரும், விஅய்டி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியருமான வி.சாந்தி, கல்லூரி மேனாள் மாணவரும், VATIO Energy India Pvt. Ltd நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஜி. ராஜகணேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன்: கல்லூரித் தாளாளர் வீ.அன்புராஜ், கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணை முதல்வர் க.ரோஜா, கோ.இராஜாஇராமன் (முதன்மையர், பெ.நூ.பா.க.).
* சிறப்பு விருந்தினர் கல்லூரியின் மேனாள் மாணவரும், விஅய்டி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியருமான வி.சாந்தி அவர்களுக்கு நிறுவனத் தலைவர் கி. வீரமணி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திட்ட இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சிவராஜா இராமநாதன், மேனாள் மாணவரும், VATIO Energy India Pvt. Ltd நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஜி. ராஜகணேசன் ஆகியோருக்கு நிறுவனத் தலைவர் கி. வீரமணி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

மறைந்த சாமிநாதன் (புதிய பார்வை ம.நடராசன் சகோதரர்) படத்திற்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மாலையணிவித்து மரியாதை செய்தார். உடன் குடும்பத்தினர் மு.மருதப்பா, மாரியம்மாள், விஜயகுமார், சரவணன், கலாவதி, தீபா, சுஜாதா, கவிதா, மருத்துவர் பழனிவேலு மற்றும் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர். (தஞ்சை மாவட்டம் விளார், 15.03.2026)

“புதிய பார்வை”
இதழின் நிறுவன ஆசிரியர் ம.நடராஜன் படத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மலர் தூவி மரியாதை செய்தார். (தஞ்சை மாவட்டம் விளார், 15.03.2026)

சுயமரியாதைச் சுடரொளி நெடுவாக்கோட்டை தோ.தம்பிகண்ணு அவர்களின் படத்துக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மாலையணிவித்து மரியாதை செய்தார். உடன்: முனைவர் அதிரடி க.அன்பழகன், நர்மதா, இங்கர்சால், லதா, மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை
இரா.ஜெயக்குமார், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரி, ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் ஜெகநாதன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் லெனின், துணைத் தலைவர் நேரு, நெடுவை விமல், கு. அய்யாதுரை
ஆகியோர் உள்ளனர்.
* பெரியார் பெருந்தொண்டர் ஆறுமுகத்தின் தொண்டினைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.
(தஞ்சை மாவட்டம், 15.03.2026)
