சுயமரியாதைச் சுடரொளி அ.பிரணாம்பாள் நினைவேந்தலும் – படத்திறப்பும்! கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புகழ் வணக்க உரை!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வேளாங்கண்ணி, மார்ச் 15 ‘‘பிரணாம்பாள் அம்மையார் என்ன எதிர்பார்த்தார்களோ? தலைமை என்ன எதிர்பார்த்ததோ? அதை செய்யக் கூடியவராக நெப்போலியன் இருக்கிறார்’’ என்றும், ‘‘எது தவிர்க்க முடியாததோ அதை ஏற்கப் பழக வேண்டும்’’ என்றும், நெப்போலியன் தாயார் அ.பிரணாம்பாள் அம்மையார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், கழகத் தலைவர் ஆசிரியர் நாகை மாவட்டத் தலைவரின் இயக்கப் பணிகளையும், அடுத்து செல்ல வேண்டிய பாதையையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

நாகை மாவட்டத்தின் சார்பில், வேளாங் கண்ணி கீழத்தெரு, மறைந்த பெரியார் பெருந்தொண்டர் கழக நாகை மாவட்ட மேனாள் தலைவர் வி.எஸ்.டி.அழகப்பன் அவர்களின் வாழ்விணையரும், இன்றைய நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன் அவர்களின் தாயாருமான அ.பிரணாம்பாள் அம்மையார் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி, 14.03.2026 சனிக்கிழமை அன்று, காலை 10:45 மணிக்கு, திருத்தல பேராலய புதிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வேளாங்கண்ணி முதன்மைச் சாலையில் இருந்து அரங்கம் வரையிலும் கழகக் கொடிகள் கட்டப்பட்டும், நிகழ்ச்சியை பற்றிய செய்திகளை தாங்கிய வண்ணம் பதாகைகள் சட்டமிடப்பட்டும் இருந்தன.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைப் பில், இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்டச் செயலாளர் புபேஷ் குப்தா, காரைக்கால் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், மன்னார்குடி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர் திருவாரூர் மோகன், நாகை மாவட்ட கழகக் காப்பாளர் முருகையன், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பட்டுக்கோட்டை மாவட்ட கழகக் காப்பாளர் அத்திவெட்டி வீரைய்யன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் – பொறியாளர் தேவ நர்மதா, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் இல.மேகநாதன், வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவர் டயானா சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்து, அ.பிரணாம்பாள் அம்மையார் அவர்க ளின் சிறப்புகளை; தொண்டறத்தை சுட்டிக்காட்டி நினைவேந்தல் மற்றும் புகழ் வணக்க உரை ஆற்றினர்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கவுதமன், கீழையூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, பேரூர் கழக திமுக செயலாளர் சார்லஸ் உள்ளிட்டோர் வருகை தந்து, திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில், அ.பிரணாம்பாள் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அ.பிரணாம்பாள் அம்மையார் படத்தைத் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்நிகழ்வில், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்.முத்துலட்சுமி இரா.செல்வ கணபதி, செ.அமுதா, எம்.விஜயகுமார், எஸ்.அஸ்விதா, எஸ்.அரவிந்த் மற்றும் கழகத் தோழர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். நிறைவாக, கழகத் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் மற்றும் புகழ் வணக்க உரையாற்றினார்.

அவர் தனது உரையை, ‘‘இந்த துய ரத்தை நாம் அனைவரும் பங்கு போட்டுக் கொள்வதற்காக இங்கே கூடி இருக்கிறோம்’’ என்றும், ‘‘பகுத்தறிவாளர்களாக நாம் இதை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ? அப்படி எதிர்கொண்டு, அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகளை செய்வதற்கு ஊக்கமாக பெறுவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி’’ என்றும் சுட்டிக்காட்டித் தொடங்கினார். நாகை மாவட்டத்தின் வேர்களாக விளங்கிய அடிநாள் தோழர்களான முத்தையா, ஆர்.வி.கோபால், எஸ்.ஆர்.ஆறுமுகம், டி.கே.விஜயா, வள்ளல் திரு.வி.பி.கே., மாயவரம் நடராசன், நாகை மணி, நாகை பாட்ஷா உள்ளிட்டோரை நன்றியுடன் நினைவு கூர்ந்து, அவர்களைப் பற்றிய சில அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். வி.எஸ்.டி. அழகப்பன் – அ.பிரணாம்பாள் இணையர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் மகன், இயக்கப் பணிகளை செவ்வனே செய்து வருகின்ற மாவட்டத் தலைவர் நெப்போலியன் அவர்களை பற்றி குறிப்பிடும்போது, “இயக்க வளர்ச்சிக்கு அடித்தளம் போன்ற பணியை ஆழமாக; தன்னைப் பற்றி கவலைப்படாமல் ஒரு ராணுவ வீரன் போல் நெப்போலியன் செயல்பட்டு வருகிறார்” என்றும், “பெற்றோர் எதை எதிர்பார்த்தார்களோ? தலைமை அவரிடம் எதை எதிர்பார்க்கிறதோ? அதைச் செய்யக் கூடியவராக நெப்போலியன் இருக்கிறார்” என்றும், ‘‘அதேபோல, நெப்போலியன் செய்ய நினைப்பதை மாவட்டச் செயலா ளர் புபேஷ் குப்தா செய்து முடிக்கிறவராக இருக்கிறார்’’ என்றும், தலைவர் – செயலாளர் இருவரையும் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து,  “இயக்கத்தில் தீவிரமாக இருப்பவர்களுக்கு ஆதரவாக; ஆதாரமாக; மகளிர் இருப்பதே  மிகப் பெரிய தியாகம் ஆகும்’’ என்று பிரணாம் பாள் அவர்களின் தொண்டறத்தை ஆழ மாக நினைவூட்டி; விவரித்து நிறைவாக, “எதை தவிர்க்க முடியாததோ அதை ஏற்கப் பழக வேண்டும்’’ என்று ஆறுதல் கூறி, “இல்லறம் – துறவறம் என்பது ஆரியத் தத்துவம். இல்லறம் – தொண்டறம் என்பது திராவிடத் தத்துவம். ஆகவே, தொண்டறம் செய்து, அதன் மூலம் இந்த இழப்பில் இருந்து மீண்டு வர வேண்டும்” என்று நெப்போலியனையும், அவரது குடும்பத்தா ரையும் கேட்டுக் கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில், திராவிடர் கழக இளை ஞரணி மாநிலச் செயலாளர் நாத்திக பொன் முடி, திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் இளமாறன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் சவு.சுரேஷ், காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், நாகை நகரத் தலைவர் செந்தில்குமார், நாகை மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், நாகை மாவட்ட துணைச் செயலாளர் சுர்ஜித், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் கவிதா, மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் ஜெயப்பிரியா மற்றும் இயக்கத் தோழர்கள், பொறுப்பாளர்கள், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலியன் அவர்களின் சித்தப்பா வி.எஸ்.டி.கைலாசம் மற்றும் அவர்க ன் உறவினர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, வி.எஸ்.டி.அன்பழகன் – அ.பிரணாம்பாள் இணை யர்கள் மற்றும் அவர்களது மகன் வி.எஸ்.டி.எ.நெப்போலியன் ஆகியோரின் இயக்க செயல்பாடுகள், தொண்டறம் பற்றிய கருத்து களை தோழர்கள் கேட்டு பயன்பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *