கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு “ஞானபீட விருது” கிடைத்துள்ளது என்னும் செய்தி மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரியதாகும்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்தி ருக்கும் சிறப்பு – முத்தமிழுக்குக் கிடைத்திருக்கும் இலக்கிய முத்தம்! தமிழ் – தமிழர் உணர்வோடு படைப்பிலக்கியத் துறையில் ஆற்றியுள்ள சாதனைகளுக்கான பாராட்டு இது!
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
– கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
